வந்ததும் வராததுமாக புதிய ஆளுநருக்கு ஓபிஎஸ் கடிதம்.. மன்னித்துவிடுங்கள் என கூறி பரபரப்பு.

Published : Sep 18, 2021, 12:43 PM IST
வந்ததும் வராததுமாக புதிய ஆளுநருக்கு ஓபிஎஸ் கடிதம்.. மன்னித்துவிடுங்கள் என கூறி பரபரப்பு.

சுருக்கம்

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  சார்பாகவும் எனது தனிப்பட்ட முறையிலுத் மிகுவும் பழமையான கலாச்சாரம், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழகத்திற்கு ஆளுநராக உங்களை வரவேற்கிறேன். பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட தங்களின் அனுபவம் நிச்சயம் தமிழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன் . 

ஆளுநர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருந்துவதாகவும், ஆளுநர் தயவுகூர்ந்து தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். பல்வேறு துறைகளில் தங்களுக்கு உள்ள அனுபவம் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில் உதவும்  என்று தான்  நம்புவதாகவும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். 

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக நாகலாந்தில் ஆளுநராக பணியாற்றிய ஆர்.என் ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆர்.என ரவி சென்னை வருகை தந்தார். அப்போது தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சென்னை விமான நிலையம் சென்று ஆளுநரை மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர். இந்நிலையில் இன்று காலை 10:30 மணி அளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்கள்பங்கேற்றனர். 

மிகவும் பழமையான கலாச்சாரம் கொண்ட தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றருப்பது பெருமை அளிக்கிறது என்றும், தமிழக மக்கள் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். வெகு விமர்சையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை, இந்நிலையில் அதற்கு வருத்தம் தெரிவித்து தன்னை மன்னித்து விடுமாறும் ஆளுநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  சார்பாகவும் எனது தனிப்பட்ட முறையிலுத் மிகுவும் பழமையான கலாச்சாரம், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழகத்திற்கு ஆளுநராக உங்களை வரவேற்கிறேன். பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட தங்களின் அனுபவம் நிச்சயம் தமிழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன். 

உங்களது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமைக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், எனது மனைவி விஜயலட்சுமி அவர்களின் மறைவால் அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்வதற்காக சொந்த ஊரில் இருந்து வருவதாகவும், அதனால் பதவியேற்பு நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சில நாட்களில் சென்னைக்கு வரும்போது முறையாக அனுமதி பெற்று ஆளுநரை சந்திப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!