தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது... புதிய ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி கூறியது என்ன?

By vinoth kumarFirst Published Sep 18, 2021, 12:23 PM IST
Highlights

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் சமீபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான, ரவீந்திர நாராயண ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்தார். 

பழம்பெருமை வாய்ந்த கலாசாரம் கொண்ட தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றது பெருமையளிக்கிறது என ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் சமீபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான, ரவீந்திர நாராயண ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்தார். இந்நிலையில், புதிய ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இதில், தமிழகத்தின் 25-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்குப் புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதேபோன்று, அமைச்சர்களும் புத்தகங்கள், சால்வைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி;- வணக்கம் என தமிழில்  கூறி செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார்.  பழம்பெருமை வாய்ந்த கலாசாரம் கொண்ட தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றது பெருமையளிக்கிறது. என்னால் முடிந்த அளவுக்கு தமிழக மக்கள்  மற்றும் தமிழக அரசின் முன்னேற்றத்துக்காக உழைக்க உள்ளேன். தமிழ்மொழியை கற்றுக்கொள்ளவும் நான் முயற்சி செய்ய இருக்கிறேன்.

 

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது. ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உட்பட்டது. அதற்கேற்ப செயல்படுவேன். அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தமிழநாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு உழைப்பேன். தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தியுள்ளது. தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து கூறுவதற்கு காலம் அவகாசம் தேவை என தெரிவித்துள்ளார். 

click me!