ஆளுநராக பதவியேற்ற அடுத்த நொடியில் தமிழில் பேசி அலறவிட்ட ஆளுநர் R.N ரவி.. தமிழக அரசு குறித்து அதிரடி கருத்து.

By Ezhilarasan BabuFirst Published Sep 18, 2021, 12:12 PM IST
Highlights

பன்வாரிலால் புரோகித் தமிழகத்திலிருந்து விடைபெற்றுச் சென்ற நிலையில், நேற்று முன்தினம் ஆர்.என் ரவி தமிழகத்திற்கு வருகை தந்தார். அவரை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். 

மிகவும் பழமையான கலாச்சாரம் கொண்ட  தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பற்றிருப்பது பெருமை அளிக்கிறது என புதிதாக ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றும், அரசின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்து கூற சில காலம் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய ஆளுநராக இன்று ஆர்.என் ரவி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டார்.அதை அடுத்து நாகலாந்து ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சங்கரநாராயணன் ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத்தலைவர் நியமித்தார். 

பன்வாரிலால் புரோகித் தமிழகத்திலிருந்து விடைபெற்றுச் சென்ற நிலையில், நேற்று முன்தினம் ஆர்.என் ரவி தமிழகத்திற்கு வருகை தந்தார். அவரை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக இன்று ஆர்.என் ரவி பதிவு ஏற்றுக்கொண்டார். கிண்டி ஆளுநர் மாளிகையில் காலை 10:30 மணி அளவில் அவரது பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சட்டப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ,அவை முன்னவர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.


பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட பின்னர் ஆளுநர் ஆர்.என் ரவி செய்தியாளர்களிம் பேசினார். தமிழில் வணக்கம் என கூறி செய்தியாளர் சந்திப்பை தொடங்கிய அவர், தமிழ்நாட்டில் இருப்பது பெருமை அளிக்கிறது, இந்திய அளவில் தமிழர் நாகரிகம் பண்பாட்டிற்கு பெயர் போனது, அரசியல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தமிழக மக்களுக்கும், தமிழக வளர்ச்சிக்கும் என்னால் முடிந்த நன்மைகளை செய்வேன். மிகவும் பழமையான கலாச்சாரம் கொண்ட தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்று இருப்பது பெருமை அளிக்கிறது. தற்போது தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து கருத்து கூற சில காலம் தேவை.  தமிழக மக்கள் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்க உள்ளேன். எனக்கு பத்திரிக்கை துறையில் சில அனுபவம் உள்ளதால் பத்திரிக்கையாளர்கள் குறித்து தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!