
அதிமுகவினர் மட்டுமல்ல அரசியலில் கைவிரல் பிடித்து படிப்படியாக முன்னேற்றிய சசிகலாவும், தினகரனுமே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் ஓ.பி.எஸ் எனும் பன்னீர்செல்வம் ஆடும் அதிரடி ஆட்டத்தை.
மவுன சாமியாய் ஜெ.வின் சமாதியில் அமர்ந்து கத்தியின்றி, ரத்தமின்றி, ஆ... ஊ... என சத்தமின்றி, வாய் பேசாமல் காந்திய வழியில் திரும்பி பார்க்க வைத்து விட்டார் ஓ.பி.எஸ்.
இந்த அதிரடி ஆட்டத்தை சசிகலா, திவாகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் .கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.
காரணம் கடந்த முப்பது ஆண்டுகளாகவே சசிகலாவால் வஞ்சிக்கபட்டவர்கள், பொய் குற்றச்சாட்டு சுமத்தி குற்றவாளி ஆக்கப்பட்டவர்கள், தப்பே செய்யாமல் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர்.
அதேபோன்றுதான் இதுவும் கடந்து போகும் என ஓ.பி.எஸ்ஸை வழக்கம்போலே harassment என்ற மன சித்ரவதைக்கு ஆளாக்கியுள்ளனர்.
இந்நிலையில் 134 அதிமுக எம்.எல்.ஏக்களில் 16 பேர் ஓ.பி.எஸ்க்கு ஆதரவாகவோ அல்லது சசிகலாவுக்கு ஆதரவு இல்லை எனவோ சொல்லிவிட்டால் அவர் முதலமைச்சராவது கேள்விக்குறியாகிவிடும்.
இந்நிலையில் தான் 5 எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த அதிரடியை தொடர்ந்துதான் சென்னை மயிலாப்பூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா மற்றும் கரூர் வைஷ்யா பேங்க்கில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் அதிமுகவின் கட்சி பணம் உள்ளது.
இதை தனது அனுமதி இன்றி யாரும் எடுக்ககூடாது என அதிரடியாக காய் நகர்த்தி உள்ளார்.
ஓ.பி.எஸ்ஸின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போயுள்ளனர் சசிகலா தரப்பினர்.
எல்லாவற்றையும் விட அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாகவே உள்ளது என ஓ.பி.எஸ் குண்டை தூக்கி போட்டுள்ளார்.
அதிமுக சட்ட விதிகளின்படி அவர் இன்னும் போருலாலராகவே நீடிப்பதாக ஓ.பி.எஸ் ஆதரவு நிர்வாகி மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.