
புரட்சி தலைவர் எம்ஜிஆரால் உருவாகி புட்சித்தலைவி ஜெயலலிதாவால் கட்டிகாத்த அதிமுக எனும் இரும்பு கோட்டை கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வருகிறது.
சசிகலா தரப்பு ஓ.பி.எஸ்க்கு கொடுத்த நெருக்கடியால் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதா சமாதியில் மவுன அஞ்சலி செலுத்திய பிறகு திடீரென போர்க்கொடி தூக்கினார்.
இதையடுத்து பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கும், தொலைகட்சிகளுக்கும் சசிகலாவுக்கு எதிராக பல கருத்துகளை முன்வைத்த வண்ணம் இருந்தார்.
இதனிடையே ஆளுநர் டெல்லியில் இருந்தமையால் சசிகலாவின் பதவியேற்பு தள்ளிவைக்கப்பட்டது.
இது சசிகலா தரப்பில் மேலும் கதிகலங்கியது. இதையடுத்து சசிகலா சிறைவசம் உள்ள எம்.எல்.ஏக்கள் டெல்லி சென்று பிரணாப்முகர்ஜி யை சந்தித்து சசிகலா பதவியேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதற்காக 150 விமான டிக்கெட் தயார் நிலையில் இருந்தன.
இதனால் டெல்லி செல்ல தயாராக இருந்த எம்.எல்.ஏக்கள் பயணம் ரத்து செய்யப்பட்டது. நாளை ஆளுனரை சந்திக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.