அம்மா கல்வியகம்… பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டும் இணையதளத்தை தொடங்கி வைத்தார் ஓபிஎஸ்…

First Published Mar 1, 2017, 12:16 PM IST
Highlights
Guidance centers specifically for general exams plus 2 students arivittullatuinta centers would be opened in the State Government indicated that they would be given the


தமிழகம் முழுவதும் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்காக பிரத்யேகமாக வழிகாட்டு மையங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த மையங்களில் தேர்வு தொடர்பான விளக்கம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தனியார் அமைப்புகளுடன் இணைந்து மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்காக பயிற்சி அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்குத் தேவையான விவரங்களை அளிக்கும் 'அம்மா கல்வியகம்' என்ற இணையதளத்தை முன்னாள் முதலரமைச்சர் ஓபிஎஸ் தொடங்கி வைத்தார்.

www.ammakalviyagam.com என்ற இந்த இணையதளத்தில் மாணவர்களுக்கு தேவையான விஷயங்கள் கிடைக்கும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

ஐஐடி நுழைவுத் தேர்வு, தொழில்நுட்பப் படிப்புகள், +2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் போன்றவை இந்த இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!