
சசிகலா குடும்பத்தை நாங்கள் ஒதுக்கி வைத்தோம். இதற்காக ஓ.பன்னீர்செல்வம் வெற்றியை கொண்டாடுவாரா என அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவின் வளர்ச்சிக்காகவும், கட்சியின் முன்னேற்றத்துக்காகவும் சசிகலா குடும்பத்தினரை நாங்கள் ஒதுக்கி வைத்தோம். இது, கட்சியின் நலன் கருதி, அனைவரும் எடுத்த முடிவாகும். அவர்களை ஒதுக்கி வைத்தது, ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றி என கூறுவது அடிப்படை ஆதராம் இல்லாதது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றிக்கு காரணமே, நான் தான் என்று கூட, ஓ.பன்னீர்செல்வம் கூறுவார். அது அவரது கருத்து சுதந்திரம். அதை நாங்கள் ஏற்க முடியாது.
பிரிந்து இருந்த இரு அணிகளும் சேருவதற்காக பேச்சு வார்த்தைக்கு, குழு அமைப்பதில் எந்த தாமதமும் இல்லை. இந்த குழுவில் மூத்த நிர்வாகிகள் உள்ளனர். அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய முடிவை தெரிவிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.