ஓபிஎஸ்.. எங்களை டார்ச்சர் பண்ணது போதாதா.? எங்களுக்கு எடப்பாடியார் போதும்.. கழுவி ஊற்றும் ஆர்பி உதயகுமார்.

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2022, 12:53 PM IST
Highlights

முழுக்க முழுக்க சுயநலத்துடன் முடிவெடுக்கக் கூடியவர் ஓபிஎஸ் அவரை ஒருபோதும் அதிமுக தொண்டர்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். 

முழுக்க முழுக்க சுயநலத்துடன் முடிவெடுக்கக் கூடியவர் ஓபிஎஸ் அவரை ஒருபோதும் அதிமுக தொண்டர்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறிய விபரம் பின்வருமாறு:- 

திமுகவுடன் கைகோர்த்து அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்தவர்தான் ஓபிஎஸ், ஆனால் அம்மாவின் அரசை நிலைநிறுத்துவதற்காக இந்தக் காட்சி இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் சேவையாற்ற வேண்டும் என உறுதிமொழி எடுத்து செயல்படுபவர்தான் எடப்பாடியார். ஆனால் அவருக்கு  எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தியவர்தான் இந்த ஓபிஎஸ், கட்சி வளர்ச்சிக்காகவும் அதன் நன்மைக்காகவும் எடுத்த அத்தனை முயற்சிகளையும் நடக்கவிடாமல் முட்டுக்கட்டை போட்டவர் ஓபிஎஸ்,

இதையும் படியுங்கள்: சொற்ப பாக்கியை காரணம் காட்டி நாட்டையே இருளில் மூழ்கடிப்பதா? இது மோடி அரசின் அராஜக போக்கு.. கண்டிக்கும் CPIM

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்த இயக்கத்திற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என ஒன்னரை கோடி தொண்டர்களின் ஒத்துழைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையாக, சத்தியமாக நீங்கள் சொல்லுங்கள் பொதுக்குழுவை தடை செய்ய நீதிமன்றம் சென்றது யார்? பொதுக்குழுவை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இயக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் இறங்கியது யார்.

இந்த இயக்கத்திற்கு எதிராக நீங்கள் எத்தனை முறை நீதிமன்றம் செல்வீர்கள்? ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக இன்று வலுவோடும் பொலிவோடும் அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது,  38 வருவாய் மாவட்டங்கள், 11 மருத்துவக்கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனையில் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

இதையும் படியுங்கள்: தனிக்காட்டு ராஜவா செயல்பட்ட ஆளுநர்.. கடிவாளம் பேட்ட ஸ்டாலின் கவர்மெண்ட்.. பதறியடித்து கடிதம் எழுதிய RN.ரவி.

ஆனால் நீங்கள் உயர்ந்த பொறுப்பில் இருந்தீர்கள் நீங்கள் இதுவரை தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறீர்கள், உங்களுக்கு  கூஜா தூக்கவில்லை என்று கூறி, கட்சிப் பொறுப்புகளில்  இருந்து பலரை நீக்கினீர்கள், நீங்கள் பணியாற்றியது போலத்தான் நாங்களும் கட்சிக்காக பணியாற்றினோம், அம்மா ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏழுமுறை நிலைப்பாட்டை மாற்றியுள்ளீர்கள்.

இன்னும் எத்தனை முறை நீங்கள் நிலைப்பாட்டில் மாறுவீர்கள் என்று யாருக்கும் தெரியாது, ஆகவே தொண்டர்களும் பன்னீர்செல்வத்தை நம்பி செல்லமுடியாது என்று உறுதியாக இருக்கிறார்கள், எனவே எதிர்காலத்தில் அம்மா ஆட்சியை உருவாக்க நாங்கள் பாடுபடுவோம், எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்துவோம், நீங்களும் உங்கள் மகன்களும் எத்தனை பேருக்கு தொலைபேசியில் அழைத்து பேசினீர்கள் யாராவது  உங்களுக்கு மதிப்பு அளித்தார்களா என்பதை மட்டும் நீங்கள் மனதை தொட்டு யோசித்து பாருங்கள்.

நான் யாரையும் காயப்படுத்துவதற்காக பேசவில்லை, தென் தமிழகத்தில் உட்கார்ந்துகொண்டு உங்களுக்கு தொண்டர்கள் ஆதரவு இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறீர்கள், இதுஆண்டிகள்  மடம்  கட்டிய கதையாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!