சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கிய ஓபிஎஸ் - ஜெவிடம் மாறாத விசுவாசம்

 
Published : Dec 18, 2016, 10:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கிய ஓபிஎஸ் - ஜெவிடம் மாறாத விசுவாசம்

சுருக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். நேற்று ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்துக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.

அவருடன், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

அப்போது, முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சாஸ்ட்டாங்கமாகவிழுந்து வணங்கினார். அவரை தொடர்ந்து அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அதேபோல் வணங்கி சென்றனர்.

அங்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிந்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழ்நாடு முழு வதும் இருந்து மாவட்டச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அணி நிர்வாகிகள் திரளாக அஞ்சலிசெலுத்த வந்தனர். இதனால், ஜெயலலிதா நினைவிடத்தில்  கூட்டம் அலைமோதுகிறது.

PREV
click me!

Recommended Stories

மனமிறங்கி வந்த இபிஎஸ்..! தாழியை உடைத்த ஓ.பி.எஸ்... அதிமுக -பாஜக கூட்டணியில் ஆடுபுலி ஆட்டம்..!
1 கோடி வாக்காளர்கள் நீக்கம்..! ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்..? புயலைக் கிளப்பும் பின்னணி..!