"சசிகலா முதல்வராக வேண்டும்" - ஜெ.நினைவிடத்தில் அமைச்சர்கள் மொட்டையடித்து வேண்டுதல்

 
Published : Dec 18, 2016, 07:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
"சசிகலா முதல்வராக வேண்டும்" - ஜெ.நினைவிடத்தில் அமைச்சர்கள் மொட்டையடித்து வேண்டுதல்

சுருக்கம்

முதலமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும் …. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி…

ஜெயலலிதா மறைவுக்கும் பிறகு அதிமுக.வுக்கு யார் தலைமை ஏற்பது என்பது தற்போது மில்லியன டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. ஓபிஎஸ், செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சசிகலா கழகத்தின பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதேபோன்று அதிமுக மாவட்டச் செயலாளர்களும் தங்கள் பங்கிற்கு சசிகலாதான தலைமை ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சரும், ஜெயலலிதா பேரவைச் செயலாளருமான திரு ஆர்.பி.உதயகுமார், திருமதி சசிகலா அதிமுக வின் பொதுச் செயலாளராக மட்டுமல்லாமல், தமிழகத்தின் முதலமைச்சராகவும் பதவியேற்க வேண்டும் என அதிரடியாக தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜெயலலிதா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் ஜெயலலிதா பேரவையின் 50 மாவட்ட செயலாளர்களும் இதை வலியுறுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இன்று ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மொட்டை அடித்து ஒட்டு மொத்தமாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்றும் அந்த தீர்மான நகலோடு சசிகலாவை சந்தித்து அவர் தமிழக முதலமைச்சராக வேண்டும் என்று வலியுறுத்துவோம் என தெரிவித்தார்.மேலும் சசிகலா ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைப்போம் என்றும் கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!