வைகோவிடம் ஸ்டாலின் வருத்தம் 

 
Published : Dec 18, 2016, 02:03 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
வைகோவிடம் ஸ்டாலின் வருத்தம் 

சுருக்கம்

நடந்த சம்பவங்களுக்காக வைகோவிடம் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து  தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க வந்த மதிமுக பொது செயலாளர் வைகோவை தடுத்து நிறுத்தியதை நான் கண்டிக்கிறேன். மருத்துவமனையில் நான் இல்லாத நேரத்தில் வைகோவிற்கு நேர்ந்த இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் யார் ஈடுபட்டு வந்ததாலும் கழக தோழர்கள் அவர்களுக்கு எதிராக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தலைவர் கருணாநிதிக்கோ, எனக்கோ எக்காலத்திலும் உடன்பாடானது அல்ல. 

கழகத்திற்கு எதிரான பிரச்சாரங்களை அரசியல் ரீதியாக ஜனநாயக முறையில் எதிர்கொள்ளும் சக்தி மிக்க தொண்டர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கழக தோழர்கள் தவிர்த்து அமைதி காக்குமாறு கண்டிப்புடன் கேட்டு கொள்கிறேன்.
 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!