OPS-க்கு தலைக்கு மேல் கத்தி; தகுதி நீக்கக்கோரும் வழக்கில்  உச்சநீதிமன்றம் அதிரடி!

 
Published : Jul 09, 2018, 11:55 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
OPS-க்கு தலைக்கு மேல் கத்தி; தகுதி நீக்கக்கோரும் வழக்கில்  உச்சநீதிமன்றம் அதிரடி!

சுருக்கம்

Ops head knife mla removal case Supreme Court stops action

அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கில் சபாநாயர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கில் சபாநாயகர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் சட்டப்பேரவை செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும் வழக்கில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். ஆட்சி அமைப்பதற்காக அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். ஆனால் போது நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உட்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். ஆனால் சபாநாயகர் இவர்கள் 11 மீதும் நடவடிக்கை மற்றும் தகுதி நீக்கம் செய்யவில்லை. ஆனால் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.  ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சார்பில் கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்ற சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து டிடிவி தினகரனும் மற்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது  அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மற்றும்  சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்