கோவை செல்வராஜை நீக்கிய ஓபிஎஸ்..! புதிய மாவட்ட செயலாளரை நியமித்து அதிரடி

By Ajmal Khan  |  First Published Dec 4, 2022, 8:57 AM IST

அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜை, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி புதிய மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
 


அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் ஓபிஎஸ் அணியில் முக்கிய தூணாக இருந்த கோவை செல்வராஜ், எடப்பாடி அணிக்கு சவால் கொடுத்து வந்தார். ஓபிஎஸ் அணி மீதான புகார்களுக்கு தனது தடாலடி பேச்சு மூலம் பதிலடி கொடுத்தார். இந்தநிலையில் திடீரென ஓபிஎஸ் மற்றும் அதிமுகவில் இருந்து விலகுவதாக கூறி கோவை செல்வராஜ் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரது செயல்பாடுகளை பார்க்கும்போது, இவர்களோடு சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக சண்டைபோடுகிற இவர்களுடன் சேர்ந்துகொண்டு நாமும் கட்சியை அழிக்கிற முயற்சியில் ஈடுபடக்கூடாது என முடிவுஎடுத்து, இன்று முதல் இவர்களிடமிருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார்.

Tap to resize

Latest Videos

அதிமுக-வில் இருந்து விலகினார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்

மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிய ஓபிஎஸ்

இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிவிப்பில், கோவை K.செல்வராஜ், M.A., Ex. M.L.A. அவர்கள் கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். கோயம்புத்தூர் மாநகர், கோயம்புத்தூர் புறநகர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் புறநகர் தெற்கு எனக் கழக ரீதியாக செயல்பட்டு வந்த மூன்று மாவட்டங்கள், நிர்வாக வசதியை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகர், கோயம்புத்தூர் மாநகர் வடக்கு, கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மற்றும் கோயம்புத்தூர் புறநகர் வடக்கு என நான்கு மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுவதாக கூறியுள்ளார். இதன் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்எல்ஏ,எம்பி, அமைச்சராகி விட்டனர்- ஆர் எஸ் பாரதி வேதனை

புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்

1. திரு. D.மோகன் அவர்கள் கோயம்புத்தூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் (கோவை தெற்கு, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிகள்)

2. திரு. சுப்ரீம் L. இளங்கோ அவர்கள், கோயம்புத்தூர் மாநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் (கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிகள்)

3. திரு. குறிஞ்சி M. மணிமாறன் அவர்கள், கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் (பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகள்)

திரு. சூலூர் P. ராஜேந்திரன், B.A., B.L., அவர்கள், கோயம்புத்தூர் புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் (கோவை வடக்கு, சூலூர் சட்டமன்றத் தொகுதிகள்) கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

காயத்திரி ரகுராம் பதவியில் பிரபல இசையமைப்பாளர்..! அண்ணாமலை அதிரடி

click me!