தொடர் போராட்டம் எதிரொலி - பொதுமக்களிடம் கிணற்றை ஒப்படைத்தார் ஓபிஎஸ்!!

Asianet News Tamil  
Published : Aug 19, 2017, 04:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
தொடர் போராட்டம் எதிரொலி - பொதுமக்களிடம் கிணற்றை ஒப்படைத்தார் ஓபிஎஸ்!!

சுருக்கம்

ops gave well to ops

தேனி லட்சுமிபுர மக்களிடம் முன்னாள் முதலமைச்சருக்கு சொந்தமான கிணறு மற்றும் 18 செண்ட் நிலம் ஒப்படைக்கப்பட்டது. 

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் ஓபிஎஸ்சின் மனைவி விஜயலட்சுமி பெயரில் ராட்சத கிணறு ஒன்று இருந்தது. அந்த கிணற்றில் இருந்து அதிக அளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டதால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமிபுரம் மக்கள், அந்த கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில்  ஓபிஎஸ் அந்த கிணற்றை லட்சுமிபுரம் மக்களுக்கு இலவசமாக தருவதாக முன்வந்தார்.

இதனிடையே சர்ச்சைக்குரிய கிணறு ஒபிஎஸ்சின் நண்பர் சுப்புராஜ் என்பருக்கு விற்கப்பட்டதாக தகவல் வந்தது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சவார்த்தையில் ஏற்கனவே உறுதி அளித்தபடி கிணறு, போர்வெல், 18 சென்ட் நிலம் போன்றவற்றை தானமாக தருவதாக ஓபிஎஸ் உறுதியளித்தார்.

அதன்படி இன்று லட்சுமிபுரம் மக்களிடம் ஒபிஎஸ்சின் கிணறு மற்றும் நிலம் ஒப்படைக்கப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

கண்டுகொள்ளாத ராகுல் - கடுப்பில் ஸ்டாலின்! என்ன நடக்குது கூட்டணியில்?
விஜய் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்த டாப் ஹீரோ - அப்போ ADMK -வுக்கு கம்பி நீட்டிவிட்டாரா?