தரையில் சம்மனம் போட்டு உட்கார்ந்த ஓபிஎஸ்- இபிஎஸ்.. அதிமுகவை அவையில் அலறவிட்ட முதல்வர் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Aug 18, 2021, 11:55 AM IST
Highlights

கொடநாடு கொலை  விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், அது குறித்து சட்டமன்றத்தில் பேச முடியாது என்றும், பிரச்சனை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே அதிமுகவினர் அவைக்கு வந்துள்ளனர் என அப்பாவு அதிமுக எம்எல்ஏக்களை விமர்சித்தார். உடனே அவைக் காவலர்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர். 

கொடநாடு கொலை வழக்கில் விவகாரத்தில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் போக்கு உள்ளது என திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். கொடநாடு கொலை விவகாரத்தில் எந்த அரசியல் தலையீடும் இல்லை, நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தான் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது, கூட்டத்தொடரில் வழக்கம் போல இன்றும் சட்டமன்ற கூட்டம் கூடியது, அப்போது கருப்பு பேட்ஜ் அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வந்ததுடன், அதில் பொய் வழக்குப் போடும் திமுகவை கண்டிக்கிறோம் என பதாகைகளை ஏந்தியபடி சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். கொடநாடு கொலை வழக்கில் திமுக அதிமுகவினரை சிக்கவைக்க சதி செய்கிறது என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். உடனே சபாநாயகர் அப்பாவு அமைதி காக்கும்படி உடனே அதிமுகவினரை எச்சரித்தார். ஆனால் அது எதையுமே பொருட்படுத்தாத அதிமுகவினர், சட்டமன்றத்தில் திமுகவை கண்டித்து முழங்கினார். இதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார் கொடநாடு கொலை  விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், அது குறித்து சட்டமன்றத்தில் பேச முடியாது என்றும், பிரச்சனை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே அதிமுகவினர் அவைக்கு வந்துள்ளனர் என அப்பாவு அதிமுக எம்எல்ஏக்களை விமர்சித்தார். 

உடனே அவைக் காவலர்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர். அவர்களுக்கு ஆதரவாக பாஜக, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கொடநாடு கொலை வழக்கு முடியும் தருவாயில் உள்ள நிலையில், அதை மீண்டும் பூதாகரமாக்கும் முயற்சிகளில் திமுக ஈடுபட்டு வருகிறது. அதில் எப்படியேனும் அதிமுகவினரை தொடர்புபடுத்தி பொய் வழக்கு போட சதி செய்கிறது, எந்த வழக்காக இருந்தாலும், சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். திமுகவின் இந்த செயலை கண்டித்து இன்றும், நாளை இரண்டு தினங்களுக்கு சட்டமன்றத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் எனக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொடநாடு கொலை வழக்கில் விசாரணை முடியும் தருவாயில் உள்ளது, இந்நிலையில் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தி பொய்யான வாக்குமூலம் பெற்று, அதில் என்னை இணைக்க திமுக சதி செய்கிறது எனக் கூறினார். இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவர்மான எட்ப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கொஞ்சம் கூட தயங்காமல் கலைவாணர் அரங்கத்தின் நுலைவாயிலில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈட்பட்டு திமுக அரசுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தரையில் அமர்வதை பார்த்த சக எம்எல்ஏக்களும் தரையில் அமர்ந்தனர். இதனால் கலைவாணர் அரங்க வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. 

இது குறித்து அவையில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கொடநாடு விவகாரத்தில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல அதிமுகவினரின் நடவடிக்கைகள் உள்ளது. கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், இந்த வழக்கில் அரசியல் தலையீடு இல்லை, முறையாக நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுத்தான் விசாரணை நடைபெறுகிறது. அதில் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இல்லவே இல்லை. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என அதிமுகவினரை விமர்சித்தார். 
 

click me!