அமாவாசை நாள்!! ராகு காலம், நல்ல நேரம்... ஓபிஎஸ் ஈபிஎஸ்ஸின் அபாரம்...

By sathish kFirst Published Sep 10, 2018, 12:49 PM IST
Highlights

‘அம்மாவின் வழியில் நடைபெறும் ஆட்சி’ என்று வாய்க்கு வாய் அ.தி.மு.க.வின் மந்திரிமார்கள் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது எந்த வகையில் பொருந்திப் போகிறதோ இல்லையோ ஆனால் ‘சென்டிமெண்ட்’ விஷயத்தில் பக்காவாக பொருந்திப் போகிறது. 

‘அம்மாவின் வழியில் நடைபெறும் ஆட்சி’ என்று வாய்க்கு வாய் அ.தி.மு.க.வின் மந்திரிமார்கள் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது எந்த வகையில் பொருந்திப் போகிறதோ இல்லையோ ஆனால் ‘சென்டிமெண்ட்’ விஷயத்தில் பக்காவாக பொருந்திப் போகிறது. 

ஜெயலலிதா போல் சகுனம் பார்த்து அரசியல் வாழ்க்கை நடத்துவதற்கு இன்னொரு தலைவர் பிறந்துதான் வரணும். தூங்கி விழிப்பதில் துவங்கி, கண்மூடி தூங்குவது வரை ஒவ்வொரு விஷயத்திலும் சகுனம் பார்த்தே வாழ்க்கை ஓட்டிய பெருந்தலைவி. 

வெளியுலகுக்கு பெரிதாய் தெரிந்திராத அவருடைய சென்டிமெண்ட்களில் சில இதோ....

*    கோடநாடில் இருக்கும் போது, பங்களாவின் ஜன்னல் வழியே கிருஷ்ண பருந்தை (கழுத்தில் வெண்மை நிறமுடைய கழுகு) பார்த்து வணங்குவது ஜெ.,வின் வழக்கம். 

*    வெளியே கிளம்புகையில் கார் ஸ்டார்ட் ஆகிவிட்டால்  ஒரு அடி கூட ரிவர்ஸ் போகக்கூடாது என்று நினைப்பார். 

*    அரசு மற்றும் அரசியல் லெவலில் முக்கிய முடிவுகளை அமாவாசையென்று எடுத்து அறிவிப்பார். 

*    பச்சை நிறமும், ஒன்பதாவது எண்ணும் தனக்கு ராசியானவை என்று கணக்கிட்டு வைத்திருந்தார். அவரது பொதுக்கூட்ட மேடைகளில் அவர் ஏறி வரும் படிக்கட்டில் ‘9’ படிகள் இருக்கும்படி அமைத்து அவரது ஆசீர்வாதத்தை பெற்ற மாவட்ட செயலாளர்கள் உண்டு. 

*    அஷ்டமி, நவமி, பாட்டமி, கீழ்நோக்கு நாள், மேல் நோக்கு நாள், வளர்பிறை, தேய்பிறை, சந்திராஷ்டமம், கிழக்கு சூலம், வடக்கு சூலம் என்று  பல விஷயங்களை கணக்கிட்டுதான் தனது அன்றாட நடவடிக்கைகளை வடிவமைப்பார். 

*    பெருமாளின் தீவிர பக்தையான ஜெ., தனது மெய்க்காவலர்கள் ‘பெருமாள் பெயருடையவர்கள்’ஆக பார்த்து நியமித்த கதையும் நடந்தது. - இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். 

இப்பேர்ப்பட்ட தலைவியினால் அமைக்கப்பட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் சிட்டிங் முதலமைச்சர்கள் இருவரும் சகுனம் பார்த்தே எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார்கள்! என்பதை கழகத்தின் சீனியர் நிர்வாகிகள் மிக வெளிப்படையாகவே பகிர்கிறார்கள். 

அந்த வகையில் நேற்று கோட்டையில் நடைபெற்ற கூட்டமும் இப்படி பக்காவாக சகுனங்கள் பார்த்தே நடைபெற்றதாம். ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் 7-பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க கூடிய அவசர கூட்டம் இது! என்று வெளியே கூறிக்கொண்டாலும் கூட ஞாயிற்றுக் கிழமையிலும் இது கூடியது ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் ‘அரசு, அரசியல் மற்றும் தேர்தல் வாக்கு வங்கி என பல முக தொடர்புடைய விஷயம் இந்த 7 பேர் விடுதலை விவகாரம். அதனால் இது மீதான முடிவை நல்ல நாள் பார்த்து எடுக்க இரு முதல்வர்களும் முடிவு செய்தார்கள். 

நேற்று அமாவாசை நாள் என்பதாலேயே இந்த கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலையான போதிலும் கூட நடத்தப்பட்டது. அதுவும் ராகு காலம், நல்ல நேரம் ஆகியன பார்த்து நான்கு மணிக்கு துவக்கி, ஆறு மணிக்குள் முடித்துக் கொண்டனர். 

அம்மாவை போலவே எடப்பாடியார், ஓ.பி.எஸ். இருவரும் சகுனங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.” என்கின்றனர் கோட்டைக்குள் வளைய வரும் ஆளுங்கட்சி நிர்வாகிகள். 
சர்தான்!

click me!