இந்நிலையில் இன்று அதிமுக அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
சசிகலா விவகாரம் தொடர்பாக அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் இன்று நேரில் சந்தித்துக் கொண்டுள்ளனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓபிஎஸ் இபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வந்தாலும், அக்கட்சிக்கு பெரிய அளவில் முன்னேற்றம் என்ற நிலை இல்லாமல் இருந்து வருகிறது. இத் தலைமைகளின் கீழ் சந்தித்த நான்கு தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியாக கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டாலும், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.
undefined
இதையும் படியுங்கள்: ஆளுநர் ஆர்.என் ரவியை எச்சரித்த Dr.ராமதாஸ்.. பழைய பார்முக்கு வந்த பாமக.. ஸ்டாலினுக்கு ஐடியா கொடுத்து அசத்தல்.
இத்தோல்விக்கு காரணம் இரட்டை தலைமை தான் என்றும், கட்சி ஒற்றைத் தலைமையின் கீழ் வந்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்றும், அந்த ஒற்றை தலைமை சசிகலாவாகவே இருக்கவேண்டும் என்று கருத்து கடந்த சில மாதங்களாக தீவிரமாக எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவு, எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டாக இணைந்து சசிகலாவையும், தினகரனையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதை ஓ பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தனர். இதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அது அதிமுகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து ஓபிஎஸ்சின் சகோதரர் ஓபி. ராஜா திடீரென சசிகலாவை சந்தித்து பேசினார். இது அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு சசிகலா மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உண்மையிலேயே ஓபிஎஸ் சசிகலாவை கட்சியில் சேரவேண்டும் என முயற்சிக்கிறாரா? அல்லது எடப்பாடி பழனிச்சாமி தொடர வேண்டும் என யோசிக்கிறாரா? என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. தனக்கு எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் சசிகலா என்ற ஆயுதத்தை கையில் எடுத்து நாடகம் நடத்துகிறார் ஓபிஎஸ் என்ற விமர்சனமும் அவர் மீது இருந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: பயங்கர அதிர்ச்சி... கையை கழுத்தில் மாட்டிக் கொண்டு SP வேலுமணி.. அதிமுகவினரை கதறவைக்கும் புகைப்படம்.
எதையுமே வெளிப்படையாக கூறாமல் இரட்டை வேடம் போடுவது ஓபிஎஸ்சின் வாடிக்கையாகிவிட்டது என்றும் அவர் மீது விமர்சனம் இருந்து வருகிறது. இந்நிலையில் பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.பி ராஜா சசிகலாவை சந்தித்த நிலையில், அவர் மற்றும் அவருக்கு ஆதரவான நிர்வாகிகளை கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என எடப்பாடி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். அதிமுகவில் சசிகலாவை சேர்க்கக்கூடாது என்றும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில்தான் ஓபிஎஸ்சின் சகோதரரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியானது. வேறு வழியின்றி ஓ.பன்னீர்செல்வமும் அந்த அறிக்கையில் கையொப்பம் இட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு வரவில்லை. அதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை என்பதே ஆகும்.
இந்நிலையில் இன்று அதிமுக அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஏராளமான மூத்த நிர்வாகிகள் அதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் ஓபிஎஸ்-இபிஎஸ் நேரடியாக சந்தித்து பேசும் வாய்ப்பு உருவாகியுள்ளது. நிகழ்ச்சி முடிந்த பிறகு சசிகலா விவகாரம் குறித்து முக்கிய நிர்வாகிகள் பேச வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்த முறையாவது ஓபிஎஸ் வெளிப்படையாக மனதில் உள்ளதை பேசுவாரா? அல்லது வழக்கப்படி பம்முவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.