அவசரமாகக் கூடுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்..! பொதுச் செயலாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனையா?

By Ajmal KhanFirst Published Jun 14, 2022, 8:42 AM IST
Highlights

 அதிமுக பொதுக்குழு வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் தொடர்பாக ஓபிஎஸ்,இபிஎஸ் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெறுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் யார்?

ஜெயலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வி கிடைத்துள்ளது இதன் காரணமாக அதிமுக தலைமை மீது தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதிமுகவில் தற்போது இரட்டைத்தலைமைக்கு பதிலாக ஒற்றை தலைமை வேண்டும் என முழக்கங்களும் எழுந்துள்ளது. எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இவர்களில் யாரையாவது ஒருவரை பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கலாமா? என்ற விவாதமும் அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தியும் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகின்ற 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இந்த நிலையில் பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவது, அதிமுகவின் தற்காலிக அவை தலைவராக தமிழ் மகன் உசேன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய அவை தலைவரை யாரைதேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே இது தொடர்பாக ஒற்றை தலைமை தொடர்பாக இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் படி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!