வெற்றிக்கனியை பறிக்க இன்று களமிறங்குகிறார் ஓபிஎஸ்… ஆர்.கே.நகரில் அதிரடி காட்டும் மதுசூதனன்…

Asianet News Tamil  
Published : Mar 26, 2017, 06:09 AM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
வெற்றிக்கனியை பறிக்க இன்று களமிறங்குகிறார் ஓபிஎஸ்… ஆர்.கே.நகரில் அதிரடி காட்டும் மதுசூதனன்…

சுருக்கம்

ops election campaign

வெற்றிக்கனியை பறிக்க இன்று களமிறங்குகிறார் ஓபிஎஸ்… ஆர்.கே.நகரில் அதிரடி காட்டும் மதுசூதனன்…

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாக இன்று தேர்தல் பிரசாரத்தில் குதிக்கிறார் ஓபிஎஸ்.

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன்,தேமுதிக சார்பில் மதிவாணன், பாஜக சார்பில் கங்கை அமரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ,சுயேட்சைகள் உட்பட 82 பேர் இத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் மருது கணேஷ், டி.டி.வி.தினகரன், மதுசூதனன் ஆகிய மூவரிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த மும்முனைப் போட்டியில் வெற்றி பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் பிரசாரமும் அனல் பறந்து வருகிறது.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தி.முக.வின் மருது கணேஷ், அ.தி.மு.க அம்மா கட்சியை சேர்ந்த டிடிவி. நினகரன், பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோர் ஆர்.கே. நகர் தொகுதியில் தங்களது பிரச்சாரங்களை  ஏற்கனவே துவங்கிவிட்டனர்.  இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அதிமுக தொண்டர்களிடை பெரும் செல்வாக்கு பெற்றுள்ள ஓபிஎஸ் இன்று அதிரடியாக ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

ஏற்கனவே மதுசூதனன் ஆர்,கே,நகர் தொகுதி முழுவதும் சுற்றிச் சுழன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

அவருக்கு பொது மக்கள்   சிறப்பான வரவேற்பு அளித்துவருகின்றனர். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் ஓபிஎஸ் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. மேலும் தேர்தல் பணிமனைகளையும் ஓபிஎஸ் தொடங்கி வைக்கிறார்

PREV
click me!

Recommended Stories

விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?
அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!