
அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து ஓபிஎஸ் பதவி விலகினார். ஆனால் அவர் போர்க்கொடி உயர்த்தியதையடுத்து நிலைமை தலைகீழானது. இதையடுத்து ஓபிஎஸ் ஐ அதிமுக வின் பொருளாளர் பதவியில் இருந்து சசிகலா அவரை துக்கி எறிந்தார்.
ஆனால் கட்சித் தாவல் தடை சட்டம் தடுக்கும் என்ற காரணத்தால் அவரை கட்சியிலிருந்து நீக்காமல் இருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக சசிகலா சிறைக்கு போகவிருப்பதால் அதற்கு முன் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இதன் முதல்படியாக அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேநேரத்தில் ஓபிஎஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி காரணத்தாலும், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்,