தேர்வு செய்யபட்டார் எடப்பாடி - அதிமுக சட்டமன்ற குழு தலைவரானார் பழனிச்சாமி

 
Published : Feb 14, 2017, 12:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
தேர்வு செய்யபட்டார் எடப்பாடி - அதிமுக சட்டமன்ற குழு தலைவரானார் பழனிச்சாமி

சுருக்கம்

சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் இனி ஓட்டு அரசியலில் ஈடுபட முடியாது.

10 ஆண்டு வரை அவருக்கு தடை விதிக்கபட்டுள்ளது. அது மட்டுமின்றி அவர் இன்றோ அல்லது நாளையோ ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டு விடுவார்.

இவ்வளவு ரணகளத்திலும் சசிகலா அசராமல் மீட்டிங் போட்டு தீபக்கா? எடப்பாடி பழனிச்சாமியா? என்று இறுதியில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

அதிமுகவில் நம்பர் 3 ஆக இருந்த எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணிதுறை அமைச்சராக உள்ளார்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டிருப்பதால் சசிகலா குடும்பத்து பிடி முற்றிலுமாக விலகியுள்ளது.

எந்த நேரத்திலும் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து கொண்டு கட்சி அலுவலக்கத்திற்கு எடப்பாடி வரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

மேலும் எடப்பாடி தேர்ந்தேடுக்கப்பட்ட தகவலையும் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் கவர்னருக்கு அனுப்பியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு