
மனக்கசப்பை மறந்து ஒற்றுமையாக செயல்படுவோம் கட்சியின் நலன் கருதி முடிவெடுங்கள் என்று எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சசிகலா , ஓபிஎஸ் என இரண்டாக பிரிந்திருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் பக்கம் ஆட்சி யார் பக்கம் என்று போட்டி போட்ட சூழ்நிலையில் ஆட்சியை பிடித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி செயல்பட்ட சசிகலா உச்சநீதிமன்ற தீர்ப்ப்பினை அடுத்து சிறை செல்கிறார்.
இந்நிலையில் சசிகலா தரப்பில் கூடி சட்டமன்ற தலைவரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர், இந்த சூழ்நிலையில் எதிர் அணியில் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஓபிஎஸ் பகீரங்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் நலன் கருதி கசப்பை மறந்து ஒன்று படுவோம். பழையதை மறந்து , ஒன்று படுவோம்.
தற்போதுள்ள சூழ்நிலையில் எது நல்லதோ அதை செய்வோம் கட்சி பிளவு படுமா என்று எதிரிகள் காத்துகொண்டிருக்கின்றனர். கட்சியின் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வேண்டுகோள் வைத்துள்ளார்.