
தமிழ்நாட்டுக்கு ஏற்படவிருந்த மிகப் பெரிய அவமானம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 கோடி ரூபாய் அபராதம் என என அவர்களின் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இது குறித்து கருத்தத் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பேஇ சசிகலா உள்ளே போக வேண்டும் என பொது மக்கள் விரும்பினார்கள் என தெரிவித்தார்.
தமிழகம் ஒரு மிகப் பெரிய அவமானத்திலிருந்து தப்பித்திருக்கிறது என அவர் குறிப்பிட்டார்,
பொது வாழ்வில் இருப்பவர்கள் துய்மையாக இருக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதியாக சுட்டிக்காட்டியுள்ளது எனவும் இளங்கோவன் தெரிவித்தார்.