"அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு ஆல் ரவுண்டர்.. அவர் செய்யாத தொழிலே இல்லை" - ஓபிஎஸ் கலாய்

 
Published : Mar 04, 2017, 03:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
"அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு ஆல் ரவுண்டர்.. அவர் செய்யாத தொழிலே இல்லை" - ஓபிஎஸ் கலாய்

சுருக்கம்

Sasikala ministers younger brother who is regarded as a supporter of tivakaran vijayabaskar as an all-rounder with all the businessman had

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தற்போதைய அமைச்சர் விஜயபாஸ்கரை கலாய் கலாய் என கலாய்த்துள்ளார்.

சசிகலாவின் தம்பி திவாகரனின் ஆதரவாளராக கருதப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு ஆல் ரவுண்டர் எனவும் எல்லா தொழிலையும் செய்பவர் எனவும் உள்குத்து பேச்சோடு நக்கல் அடித்துள்ளார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் பதவி விலகிய பின் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தபிறகு செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பை கிளப்பினார்.

அப்போது அவர் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோரது பெயரை உச்சரித்தார்.

இதில் விஜயபாஸ்கர் மற்றும் உதயகுமார் ஆகியோரைத்தான் நேரடியாக குற்றம் சாட்டி பேசினார்.

இந்த நிலையில் நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனது ஆதரவு நிர்வாகிகளோடு ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தம்பிதுரை மற்றும் வைகைசெல்வன் ஆகியோரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசினார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும். அப்போல்லோவில் ஜெ. தன்னை சந்தித்தார் என்று செங்கோட்டையன் கூறுவது பொய் என்று கூறினார்.

மேலும் தனக்கு முதல்வர் பதவி போனதால் வருத்தமில்லை எனவும் பதவியில் இருந்தால் தஞ்சாவூர் பொம்மை போல் அவர்களுக்கு தலையாட்ட வேண்டியிருக்கும் என்று கூறினார்.

கூவத்தூரில் அடைதுவைக்கபட்ட எம்எல்ஏக்களுக்கு ரூ.3 கோடி பணமும் 3 கிலோ தங்கமும் வழங்கப்பட்டதாகவும் ஆனால் அதை தூக்கியெறிந்து விட்டு செம்மலை வந்தார் எனவும் பேசினார்.

கட்சிக்கும் ஆட்சிக்கும் ஆசைப்பட்டு சசிகலா குடும்பத்தினர் கூட்டுச்சதி செய்தி வருவதாக குற்றம்சாட்டினார்.  

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கரையும் ஒரு பிடி பிடித்தார். விஜயபாஸ்கர் ஒரு ஆல் ரவுண்டர் என்றும் அவர் செய்யாத தொழிலே இல்லை என்றும் ஏதோ ஒரு உள்ளர்த்தம் கலந்து ஓபிஎஸ் பேசி உள்ளது அதிமுக வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!