
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மத்திய அரசின் நல்ல பல திட்டங்களுக்கு அனுமதி அளித்து கையெழுத்து போட்டுவிட்டு தற்போது எதுமே தெரியாதவாறு ஸ்டாலின் நாடகமாடுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, மத்திய அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இருதய நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் “ஸ்டென்ட்” ரூ. 3 லட்சம் வரை இருந்தது. பிரதமர் மோடியின் நடவடிக்கையால் தற்போது ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் “ஸ்டென்டின்” விலை ரூ. 20 ஆயிரத்திற்கு கிடைக்கிறது என தெரிவித்தார்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு ஆராய்ச்சிக்காக மட்டுமே கையெழுத்திட்டதாக கூறும் ஸ்டாலின் அப்போது தெரியாததா இது விவசாயிகளுக்கு எதிரான திட்டம் என்று என கேள்வி எழுப்பினார்.இப்பிரச்சனையில் அவர் நாடகம் ஆடுவதாகவும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அரிசி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில்லை என குற்றம் சாட்டிய தமிழிசை தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயலிழந்து விட்டதாக தெரிவித்தார்.
கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவும், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த பாரதீய ஜனதா முயற்சி எடுத்து வருதாகவும் தமிழிசை தெரிவித்தார்