ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு . தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !!

First Published Apr 27, 2018, 3:33 PM IST
Highlights
OPS case in chennai HC


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில்  அவருக்கு  எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீா் செல்வம் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினா்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற மனுவை   சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த  பிப்ரவரி  மாதம் 18ம் தேதி முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீா்செல்வம் உள்பட அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் 11 போ் முதல்வா் மீது நம்பிக்கை இல்லை என்று வாக்களித்தனா். 

இதனைத் தொடா்ந்து அதிமுக கட்சியின் கொறடா உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீா் செல்வம் உள்பட நம்பிக்கை இல்லை என்று வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினா்களையும் கட்சி தாவல தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தார்.

மேலும் கோவை வடக்கு தொகுதியைச் சோ்ந்த அருண் குமார் கட்சி கொறடாவின் அனுமதியை பெறாமல் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து விட்டார். இதனால் அவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சக்கரபாணி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த வழக்கு சென்னை உயா்நீதி மன்றத்தில் நடைபெற்றது. இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கிறிஞராக கபில்சிபல் திமுக சார்பில் ஆஜராகி வாதாடினார். இது தொடர்பான அனைத்து விசாரணையும் முடிந்து விட்டதையடுத்து  இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.

அரசியலில் பெசிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்தய முடியாது என்று  கூறி மனுவை  நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்..

இதையடுத்து ஓபிஎஸ், அமைச்சர் மாபா பாண்டியராஜன், மற்றும்  11 எம்எல்ஏக்களின் பதவி தப்பியது.

 

 

click me!