ஓ.பன்னீர் செல்வத்துக்கு புதுப்பதவி !! கேரளாவை கலக்கும் அதிரடி தகவல் !!

By Selvanayagam PFirst Published Jul 15, 2019, 8:45 PM IST
Highlights

கேரள மாநில கவர்னராக உள்ள சதாசிவத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில்,  அம்மாநிலத்தின் கவர்னராக ஓபிஎஸ் நியமிக்கப்பட உள்ளதாக கேரளா முழுவதும் தகவல்கள் பரவிக்கிடக்கின்றன.
 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பாஜகவுடன் நெருக்கமானார்.  பாஜக அறிவுறுத்தலின்படியே தான் தர்மயுத்தம் மேற்கொண்டதாக ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இணைப்பு நடைபெற்றது.

கிட்டத்தட்ட பாஜகவின் மனசாட்சியாகவே ஓபிஎஸ் இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வாராணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது ஓபிஎஸ்ம் அவரது மகனும் அங்கு சென்று அந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

அந்த நிகழ்வில் பங்கேற்றபின் தமிழகம் திரும்பிய ஓபிஎஸ் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் தான் என்றும் அதிமுகவில் தான் இருப்பேன் என்றும் ஒருகாலும் அதிமுகவைவிட்டு விலக மாட்டேன் என்று தெரிவித்தார்.

இதே போல் ஓபிஎஸ் மகன் மட்டும் தமிழகத்தில் வெற்றிபெற்ற போது அவருக்காக அமைச்சர் பதவிக்கு டெல்லி சென்று ஓபிஎஸ் காத்திருந்தார். அப்போது கூட ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பாஜகவில் இணையப் போவதாக தகவல் பரவியது.

இந்நிலையில் தான் ஓபிஎஸ் கேரள மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்படப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கேரளா மாநில ஆளுநராக உள்ள சதாசிவத்தின் பதவிக் காலம் விரைவில் முடியப் போவதால், அடுத்தபடியாக கேரளா ஆளுநராக ஓபிஎஸ் நியமிக்கப்பட உள்ளதாக கேரள மாநில பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் இது குறித்து ஓபிஎஸ் தரப்பில் பேசும்போது இது தவறான தகவல் என்றும், அதிமுகவை விட்டு என்றும் அவர் விலகப் போதில்லை என தெரிவித்தனர்.

click me!