எதுக்குமே உதவாதவர் எதிர்க்கட்சி தலைவர்... மு.க.ஸ்டாலினை வெளுக்கும் தமிழிசை..!

Published : Jul 15, 2019, 06:42 PM ISTUpdated : Jul 15, 2019, 06:43 PM IST
எதுக்குமே உதவாதவர் எதிர்க்கட்சி தலைவர்... மு.க.ஸ்டாலினை வெளுக்கும் தமிழிசை..!

சுருக்கம்

தமிழக வளர்ச்சிக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழக வளர்ச்சிக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக திமுக-காங்கிரஸ் கூட்டணி எம்.பி.களின் செயல்பாடுகள் குறித்து பெருமிதம் எனும் ஸ்டாலின் அவர்களே அவைக்குறிப்பில் ஏறாத கோஷங்கள், கோரிக்கை மனு அளிப்பு, வேஷங்கள் இல்லாத இந்தி திணிப்பு எதிர்ப்பு நாடகங்கள், வந்துவிட்ட நீட் தேர்வுக்கு வீண் எதிர்ப்பும் வரமறுத்த காவிரி நீரை கோர மறந்த கூட்டணி தர்மம்! 

ஏற்கனவே இருந்த ரயில் ஊழியர் மொழி பயன்பாட்டு அரசாணைகளை உடனே அமுலாக்கிய மைய அரசின் வேகத்தை எம்.பி.க்கள் சாதனை எனவீண் ஜம்பம். பொய்வாக்குறுதி எனும் கமர்கட் தந்து காது கம்மலை திருடிய திமுக. ஊழல் விஞ்ஞானிகளின் காதறுந்த ஊசிகள் அங்கே. வீண்ஜம்பம் இங்கே? இனி தமிழகம் ஏமாறப்போவதில்லை தாமரை மலர்ந்தே தீரும். 

எதுவும் செய்ய இயலாதவர்கள் விமர்சிக்கிறார்கள் என்கிறார் ஸ்டாலின்... ஆம். பொய் வாக்குறுதி தர இயலாதவர்கள்... ஓட்டுக்கு பணம் தர இயலாதவர்கள்... ஊழல் செய்ய இயலாதவர்கள்... வாரிசு அரசியல், குடும்ப அரசியல் செய்ய இயலாதவர்கள்... கருப்பு பணம் பதுக்கி பணம் சேர்த்து அரசியல் வியாபாரம் செய்ய இயலாதவர்கள்... தமிழ் மொழியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த இயலாதவர்கள்... ஆனாலும் விமர்சிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு என அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!