
பணிவு என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஓபிஎஸ் தான்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவாகட்டும், சசிகலாவாகட்டும் அல்லது யாராக இருந்தாலும் பணிவு காட்டுவதில் ஓபிஎஸ் ஐ மிஞ்ச ஆள் இல்லை என்றே சொல்லாம்.
அவரது பணிவு மிக்க நடவடிக்கையை ஒரு சிலர் கேலி செய்தாலும் ஓபிஎஸ் நாளுக்கு நாள் மக்களின் மனங்களில் உயர்வைப் பெற்று வருகிறார். அதே நேரத்தில் தன்னை யார் கேலி செய்தாலும் இதை புறந்தள்ளி, கேலியை சாதாணமாக எடுத்துக் கொள்ளும் மனநிலையை அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டப் பேரவையில் நடந்த நிகழ்வொன்று எம்எல்ஏக்களை சிரிப்பலையில் சிக்க வைத்தது.ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும் முன் எம்எல்ஏக்கள் பேசினர்,
அப்போது மதுராந்தகம் தொகுதி திமுக உறுப்பினர் புகழேந்தி, ஓபிஎஸ் ஐ கேலி செய்வது போல் வளைந்து, குனிந்து நின்று தான் கொடுத்த திருத்தங்கனை முன்மொழிவதாக கூறினார். அவரது செய்கையை பார்த்து உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.
இதனைத் தொடர்ந்து பதிலுரை அளிப்பதற்காக எழுந்த ஓபிஎஸ், புகழேந்தியைப் பார்த்து ஆரம்பப் பள்ளி மாணவரைப் போன்று கைகட்டி, வாய் பொத்தி புகழேந்தி பவ்யம் காட்டினார்.
பணிவுக்கு பணிவு காட்டும் என்னையும் விஞ்சி விட்டார் புகழேந்தி எனக்கூறி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார். இதை அவர் தொடர வேண்டும் என கூறிய போது சபையே விழுந்து விழுந்து சிரித்தது.
தன்னிடம் குறை இருப்பது போல் தோன்றியவற்றை மற்றவர்கள் சுட்டிக்காட்டும் போது அதை தனக்கு சாதகமாக மாற்றுவதில் வல்லவரான ஓபிஎஸ் மற்றவர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விடுகிறார்.