அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சி சின்னம், பெயர், கொடியை தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு வரும் 15ம் தேதி விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சி சின்னம், பெயர், கொடியை தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யவுள்ளதாகவும், அதனை அவசர அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென ஓ.பி.எஸ். சார்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்றைக்கு மேல் முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்திருந்தனர். ஆனால், மனு இன்று பட்டியலிடப்படாத நிலையில், ஓபிஎஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க;- 20 முறை கடிதம் கொடுத்தாச்சு.. எந்த நடவடிக்கையும் இல்லை- ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்- நீதிமன்றம் அதிரடி
இன்றே விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். முறையீடு செய்யப்பட்ட அன்றே மனு தாக்கல் செய்யாத நிலையில் எப்படி இன்று விசாரணைக்கு எடுக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்தனர். தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மனுவை எண்ணிட பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.