
துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தன்னை சந்திக்க நேரம் கேட்டார் எனவும் சென்ற ஆண்டு யாருக்கும் தெரியாமல் என்னை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்கலாம் என ஐடியா கொடுத்தார் என டி.டி.வி. தினகரன் கொளுத்தி போட்டார்.
அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், எனது பழைய நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் தினகரனை சந்தித்தேன் என்றும், ஆனால் அவர் திரும்பவும் தன்னையே முதலமைச்சராக வேண்டும் என கூறிதாகவும், தினகரன் திருந்தி விட்டார் என நின்த்துத்தான் அவரை சந்தித்ததாக பதிலடி கொடுத்தார்.
ஆனால் ஓபிஎஸ்ன் இந்த பதில் அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து அக்கட்சிக்குள் சற்று குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உலகிலேயே மிகவும் மோசமான ஊழல் பேர்வழிகளான ஓபிஎஸ்ம், டி.டி.வி.தினகரனும், இந்தப் பூனையும் பால் குடிக்குமா ? என மக்களிடம் தங்களை காட்டிக் கொள்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.
இனி அதிமுகவை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும், விரைவில் இந்த ஆட்வி கவிழ்ந்துவிடும் என்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.