படை பரிவாரங்களுடன் டெல்லிக்கு பறக்கும் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ்... பரபரக்கும் அரசியல் களம்..!

Published : Feb 09, 2021, 11:56 AM IST
படை பரிவாரங்களுடன் டெல்லிக்கு பறக்கும் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ்... பரபரக்கும் அரசியல் களம்..!

சுருக்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அடுத்த வாரம் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லிக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அடுத்த வாரம் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லிக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதிமுக அலுவலகம் டெல்லியில் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. அதனைத் திறந்து வைப்பதற்காக இந்த பயணம் மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையில், டெல்லி செல்லும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அந்த அலுவலகத்தை திறந்து வைக்கக் கூடும் என சொல்லப்படுகின்றது. அவர்களுடன் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலரும் டெல்லிக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ளார். இதனால், தமிழக அரசியல் களம் அனலடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் டெல்லி செல்ல இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது. டெல்லியில் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்களை சந்திப்பார்களா? என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த மாதம் (ஜனவரி- 18) டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அச்சர் அமித்ஷாவையும் நேரில் சந்தித்துப் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு