மூடு விழாவுக்கு ப்ளான் போடும் மோடி... பாய்ந்து அடிக்கும் பவ்யமான பன்னீர்... பதறித்துடிக்கும் பாஜக!

Asianet News Tamil  
Published : Feb 03, 2018, 10:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
மூடு விழாவுக்கு ப்ளான் போடும் மோடி... பாய்ந்து அடிக்கும் பவ்யமான பன்னீர்... பதறித்துடிக்கும் பாஜக!

சுருக்கம்

OPS and edappadi team ministers are ready to fight with BJP

எடப்பாடி அரசை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தபடி இருப்பது தமிழக மக்களிடம் பிஜேபிக்கு கெட்ட பெயரை உண்டாக்கிவருகிறது. இப்படியே போனால், தமிழகத்தில் பிஜேபி மீதான வெறுப்பு இன்னும் அதிகமாகும்’ என நினைக்கிறதாம் பாஜக மேலிடம். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்த வழக்கு, ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு, குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு என அனைத்திலும் விரைவில் தீர்ப்பு வந்துவிடும். எப்படியும் அந்த தீர்ப்பு எடப்பாடி அரசுக்கு எதிராகத்தான் வரும். அப்படி வரும் பட்சத்தில் அதையே காரணமாக வைத்து மளமளவென காய்கள் நகர்த்தப்பட்டு அமைச்சரவைக்கு மூடுவிழா தான்.

பாஜக மீது அதிமுக அரசும் வெறுப்பை காட்ட ஆரம்பித்திருக்கிறது. ‘ஆர்.கே.நகரில் பணம் என்பதை தாண்டி தினகரன் ஜெயிக்க ஒரே காரணம், அவர் பாஜகவை எதிர்த்து தான். தமிழகத்தில் நம்மை பாஜகவின் பிரதிநிதியாகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள், அப்படி இவர்கள் நம்மை வெளியே காட்டியிருக்கிறார்கள். இதை முதலில் நாம் உடைத்தெறிந்தாலே போதும் நமக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடிட்டே போகும்.  

பாஜக மீது ஒட்டுமொத்த மக்களும் அதிருப்தியில் இருக்காங்க. நாம பாஜகவை ஆதரிப்பதால், அந்தக் கோபம் நம்ம மீதுதான் திரும்பிவிடும். அவங்களுக்கு படிந்து போவதால் இனி நமக்கு ஒரு பயனும் இல்லை, பாஜக அரசு செய்யும் தவறுகளை நான் இனி வெளியில் சொல்லியே ஆகணும். அவங்க இனி நமக்கு ஆதரவாக இருந்தாலும் எந்த பயனும் இல்லை, அவங்க நம்மை எதிர்ப்பதில்தான் குறியாக இருக்காங்க...’ என்று எடப்பாடியிடம் சில அமைச்சர்கள் சொல்லி இருக்கிறார்கள். பாஜகவை எதிர்க்க எடப்பாடி பன்னீரிடமிருந்து இருந்து க்ரீன் சிக்னல் வந்த பிறகுதான்  பாஜகவை தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

‘தேசியக் கட்சிகளால் ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது’ என்று வெளிப்படையாகவே கொளுத்திப் போட்டார் துணை முதல்வர் பன்னீர். செல்லூர் ராஜுவும் அவரது பங்குக்கு, மத்திய பா.ஜ.க அரசு அறிவித்த திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளதா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட மிகக் குறைவான வாக்குகளை வாங்கிய பா.ஜ.க தமிழக அரசை எப்படி விமர்சிக்கலாம்? தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு இடமே இல்லை என்று கடுமையாக பேசினார். 

இதேபோல தம்பிதுரையும், திராவிடத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து அனைவரும் சமமாக வாழ திராவிட இயக்கம்தான் காரணம். தேசியக் கட்சிகள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் உள்ளீர்கள். தமிழகத்தில் டெபாசிட் வாங்க முடியாத நிலையில்தான் தேசியக் கட்சிகள் உள்ளன. நோட்டாவைவிடக் குறைவான வாக்குகளைப் பெற்றதுதான் தேசியக் கட்சிகளின் சாதனை என்றார் பகிரங்கமாக எதிர்த்தார்.

இதனையடுத்து, டிவிட்டரில் பதிலளித்துள்ள சிங்கை ராமச்சந்திரன் வழியாக, மற்றவர்களை ஆண்மையற்றவர்கள் என விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தி வாழ்வில் என்ன சாதித்திருக்கிறார் எனக் கேள்வியெழுப்பி உள்ளார். தமிழகத்தில் நோட்டாவை விட பாரதிய ஜனதா ஏன் குறைவான வாக்குகள் வாங்கியது என்பது குறித்து குருமூர்த்தி கூற முடியுமா? குருமூர்த்தியோ, பாரதிய ஜனதாவோ தனித்து நிற்கும் போது எத்தனை பேர் தமிழகத்தில் ஆதரவளிக்கிறார்கள் என்பதை பார்க்க முடியுமா என்றும் கூறியுள்ளார். திறனாய்வாளர் போன்று குருமூர்த்தி காட்டிக் கொள்வதால் தமிழகத்திற்கு எந்தப் பலனும் இல்லை என பதிலடி கொடுத்தனர்.

ஜெயகுமாரும் தன் பங்கிற்கு ஆடிட்டர் குருமூர்த்திக்கு முகம் என்பதே கிடையாது. ஆண்மை இல்லாதவர்கள் அதைபற்றி பேசுவார்கள். இவ்வளவு கீழ்தரமான வார்த்தைகளை பேசுவது ஜனநாயகத்தில் வெட்கி தலை குனிய வேண்டியது.  ஆடிட்டர் குருமூர்த்தி என்ன கிங் மேக்கரா? எதற்கும் ஒரு எல்லை உண்டு. அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளை போன்று இயக்கத்தை கட்டிக்காத்து வருகின்றனர். எந்த முகத்தில் பேசுகிறார் என்பதை ஆடிட்டர் குருமூர்த்தி தெளிவுபடுத்த வேண்டும். தடித்த வார்த்தை கூற கூடாது, அப்படி இல்லையென்றால் நாங்கள் நூறு வார்த்தை சொல்வோம். அவசியம் ஏற்பட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என வெளுத்து வாங்கினார்.

வேலுமணியும் கூட எதிர்த்துள்ளார். இப்படியாக பிஜேபிக்கு அதாவது மத்திய அரசுக்கு எதிராகப் பேச ஆரம்பித்தார்கள் அமைச்சர்கள். அமைச்சர்களின் லிஸ்ட் டெல்லிக்கு நொடிக்கு நொடி பறக்கிறதாம்.

PREV
click me!

Recommended Stories

தேர்லுக்காக ஸ்லோ பாய்ஸன் கொடுத்து கொல்லப்பட்ட கலீதா ஜியா... வங்கதேச அரசியலில் அதிர்ச்சி..!
டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!