பன்னீர் முதல்வர் அல்லது ஆட்சி கலைப்பு: மோடியின் முடிவால் அதிர்ச்சி அடைந்த தினகரன்!

 
Published : Apr 13, 2017, 11:42 AM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
பன்னீர் முதல்வர் அல்லது ஆட்சி கலைப்பு: மோடியின் முடிவால் அதிர்ச்சி அடைந்த தினகரன்!

சுருக்கம்

OPS and BJP Plan Against Sasikala Team

வலிமை வாய்ந்த அதிமுக, சசிகலா அணி, பன்னீர் அணி, தீபா பேரவை என மூன்றாக பிரிந்து கிடக்கிறது. அத்துடன் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் அக்கட்சி மேலும் பலவீனம் அடைந்துள்ளது.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு, ஆர்.கே.நகர் இடை தேர்தல் ரத்து போன்றவை, ஆளும் சசிகலா தரப்பை கடுமையாகவே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதையடுத்து, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தூது அனுப்பி மோடியிடம் சமரச உடன்படிக்கை செய்துகொள்ள முயற்சி எடுத்தார் தினகரன். அதன்படி நேற்று முன்தினம், மோடியை சந்தித்தார் தம்பிதுரை. 

ஆளும் கட்சியின் அமைச்சராக உள்ள ஒருவரின் வீட்டில் ரைடு நடந்தால், மக்கள் மத்தியில் ஆட்சியின் மீது அவநம்பிக்கை ஏற்படாதா? என்று, மோடியிடம்  கொஞ்சம் பணிந்தே பேசி இருக்கிறார் தம்பிதுரை.

மேலும் நீங்கள் கேட்பதை செய்து கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அப்படி இருந்தும் நீங்கள்  மீண்டும், மீண்டும் சோதித்தால் கட்சியும், ஆட்சியும் தாங்காது என்று வெளிப்படையாகவே சரணடைய தயார் என்றும் சொல்லி இருக்கிறார். 

பன்னீர் தரப்பு எம்.பி.மைத்ரேயனை அருகில் வைத்துக்கொண்டே தம்பிதுரை சொன்ன அனைத்தையும் ஒன்றுவிடாமல் கேட்டுள்ளார் பிரதமர் மோடி.

பின்னர், ஆட்சியை பன்னீரிடம் கொடுங்கள். கட்சியை வேண்டுமானால் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும்  என்று கூலாக ஒரே வரியில் பதில் சொல்லி இருக்கிறார் மோடி.

மோடி இப்படி வெளிப்படையாக பேசுவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத  தம்பிதுரை, மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். எனினும் அதை கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல், சிறிது மவுனத்திற்கு பின்னர், நீங்கள் சொல்வதை  தினகரனிடம் பேசிவிட்டு வந்து மீண்டும் சந்திக்கிறேன் என்று கூறி அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.

மோடியின் பதிலால் கோபமடைந்த தினகரன், என்ன இழப்பை சந்தித்தாலும் சரி, ஆட்சியே போனாலும் பரவாயில்லை,  மோடியையும், பன்னீரையும் கொஞ்சம் கூட  நம்பக்கூடாது என்று  கொந்தளித்திருக்கிறார்.

பன்னீர்செல்வம் முதல்வராவதை, தினகரன் ஒருபோதும்  ஏற்க மாட்டார். தினகரன் என்னதான் சரண்டர் ஆனாலும், அதை பாஜக வால் ஏற்கமுடியாது. எனவே, தமிழகத்தில் பிரயோகிக்கப்பட வேண்டிய ஒரே ஆயுதம் ஆட்சி கலைப்புதான் என்று முடிவு செய்துள்ளார் மோடி. 

மோடியின் ஆட்சி கலைப்பு அஸ்திரத்தை, தினகரன் தரப்பு எப்படி எதிகொள்ளப் போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்