"பாஜகவுடன் மோதல் போக்கு வேண்டாம்" - அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கிய எடப்பாடி

First Published Apr 13, 2017, 11:09 AM IST
Highlights
edappadi advice to ministers


ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து, விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என தொடர்ந்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதால் பாஜகவுடம் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்  என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை தொடர்ந்துவருமான வரித்துறை 

அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுமற்றும் அவரது கல்குவாரி, உறவினர்கள், உதவியாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்கான ஆவணங்கள்மற்றும் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டன..

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கரை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து வருமானவரித்துறை உயர் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணைநடத்தினார்கள்.

அப்போது விஜயபாஸ்கர் அளித்த பதில்கள் முழுவதையும் வீடியோவில் பதிவு செய்தனர்.

அடுத்த கட்டமாக விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரையும் சோதனையிட வருமான வரித்துறை அதிகாரிகள்முடிவுசெய்துள்ளனர். பல கோடி பணம் கைமாற்றப்பட்டதற்கான ஆவணங்கள் வருமான வரித்துறையினரிடம் சிக்கிஉள்ளதால்  அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் விஜயபாஸ்கரிடம் விரைவில் விசாரணை நடத்துவார்கள் எனதெரிகிறது.

இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைகூட்டம் நடைப்பெற்றது.

இதில் அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, விஜய பாகம் உள்ளிட்டோர் பங்கேற்று தீவிர ஆலோசனை நடத்தினர்.

அப்போது தொடர்ந்து பாஜக , தமிழக அரசை குறிவைத்து செயல்பட்டு வருவதாக வந்த தகவல்களை அமைச்சர்களிடம் எடப்பாடி பழனிசாமி விளக்கினார். எனவே பாஜகவுடன் மோதல் போக்கை யாரும் கடைப்பிடிக்க வேண்டாம் என வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!