அமெரிக்கா பறக்கும் ஓபிஎஸ் !! 10 நாட்கள் சூப்பர் பயணத் திட்டம் !!

Published : Nov 01, 2019, 09:58 AM IST
அமெரிக்கா பறக்கும் ஓபிஎஸ் !! 10 நாட்கள் சூப்பர் பயணத் திட்டம் !!

சுருக்கம்

தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் 10 நாள் அரசு முறைப் பயணமாக வரும் 8 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு முறைப் பயணமாக லண்டன், அமெரிக்கா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்த கொண்ட அவர் 55 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்து வந்தார். அவருடன் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், துனை முதலமைச்சர்  ஓ பன்னீர் செல்வமும் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார். 10 நாள் பயணமாக வரும் 8 ஆம் தேதி அதிகாலை ஓ பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் உடன் செல்கிறார். 


அமெரிக்காவில்   ஓ பன்னீர் செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்கிறார். சிகாகோவில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஓ பன்னீர் செல்வம் பங்கேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ்ன் அமெரிக்க பயணம் குறித்து இரண்டொரு நாளில் அதிகாரிப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை