இடைத் தேர்தலில் தோல்வி ! இனி உள்ளாட்சித் தேர்தல் நடத்துங்கன்னு கேட்கவே மாட்டார் ! ஸ்டாலினை கலாய்த்த செல்லூர் ராஜு !!

Published : Nov 01, 2019, 08:43 AM IST
இடைத் தேர்தலில் தோல்வி ! இனி உள்ளாட்சித் தேர்தல் நடத்துங்கன்னு கேட்கவே மாட்டார் ! ஸ்டாலினை கலாய்த்த செல்லூர் ராஜு !!

சுருக்கம்

விக்கிரவாண்டி  மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திமுக படுதோல்வி அடைந்ததால் இனி ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கன்னு கேட்க மாட்டார் என அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல் செய்துள்ளார்.

மதுரையில் செய்திளார்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்குழாயில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க அரசு அனைத்து நடவடிக்கையையும் எடுத்தது. ஆனால் அந்த குழந்தையை உயிரோடு மீட்க முடியவில்லை என்ற வேதனை முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்குமே உள்ளது.

ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பத்தில் அரசின் நடவடிக்கையை பாராட்டிவிட்டு தற்போது குறைகூறி வருகிறார். 

அவர் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வது எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துக்கு நல்லதல்ல. அரசின் நடவடிக்கையை பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது என தெரிவித்தார்..

மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இனி உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள் என்று சொல்ல மாட்டார், ஏனென்றால் இடைத் தேர்தல் தோல்வி அவருக்கு சரியான பாடம் கத்தக் கொடுத்துள்ளது என அமைச்சர் கிண்டல் செய்தார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!