
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் புத்துணர்வு சிகிச்சைக்காக மீண்டும் கோவை ஆரிய வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓபிஎஸ் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆரிய வைத்தியசாலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை புத்துணர்வு சிகிச்சை பெற்றார்.
அவருக்கு கேரள பாரம்பரிய முறையில் உணவும், காய்கறிகளும் வழங்கப்பட்டன. மூலிகை எண்ணெயில் சிறப்பு ஆயில் மசாஜ்ட் ஒபிஎஸ்க்கு வழங்கப்பட்டது. இந்த சிகிச்சை முடிந்த கடந்த 28 ஆம் தேதி ஓபிஎஸ் கோவை ஈச்சனாரி கோவில், மாசாணியம்மன் கோவில் போன்ற கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து சென்னை திரும்பிய அவர் தனது வழக்கமான அரசியல் பணிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் ஓபிஎஸ் நேற்று மாலை விமானம் மூலம் கோவை வந்து ஆரிய வைத்தியசாலையில் அட்மிட் ஆனார். அவருக்கு அங்கு 2 ஆம் கட்ட புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓபிஎஸ்க்கு இரண்டு நாட்கள் அங்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. ஓபிஎஸ் சிகிச்சை பெற்று வருவதால் அவரை யாரும் சந்திக்க வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.