டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு.. போராட்டத்தில் ஈடுபட்ட மறை மாவட்டஆயர்கள், எம்பி ,எம்எல்ஏக்கள் மீது வழக்கு.!

By T BalamurukanFirst Published May 12, 2020, 11:20 PM IST
Highlights

மதுக்கடை திறப்புக்கு எதிராக பதாகை ஏந்தியதற்காக கத்தோலிக்க ஆயர்கள் மீது வழக்கு பதிவு செய்ததைக் மற்ற கிறிஸ்த்தவ அமைப்புகள் தமிழக அரசுக்கு வன்மையான கண்டனங்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 

மதுக்கடை திறப்புக்கு எதிராக பதாகை ஏந்தியதற்காக கத்தோலிக்க ஆயர்கள் மீது வழக்கு பதிவு செய்ததைக் மற்ற கிறிஸ்த்தவ அமைப்புகள் தமிழக அரசுக்கு வன்மையான கண்டனங்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

 தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த கோட்டாறு மறை மாவட்ட ஆயரும்  பிஷப் நசரேன் சூசை மீதும் பதாகைகள் ஏந்தி நின்ற 30 பேர் மீதும்  அதே போலவே மதுக்கடை திறப்புக்கு எதிரான பதாகைகளை ஏந்தி நின்ற குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம் தாஸ் மீதும் அங்குள்ள மக்கள் 9 பேர் மீதும் நாகர்கோவில் நேசமணி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று 6 எம்எல்ஏக்கள் இதில்  திமுக எம்எல்ஏக்களான சுரேஷ்ராஜன் ஆஸ்டின் மனோதங்கம் காங்கிரஸ் எம்எல்ஏக்களான விஜயதரணி பிரின்ஸ் ராஜேஸ்குமார் கன்னியாகுமரி எம்பி வசந்த்குமார் ஆகியோர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கோட்டாறு மறைமாவட்டம் கிறிஸ்தவர்கள் பேசும் போது" நூறு ஆண்டுகளை கடந்த பழமையான மறைமாவட்டம் இது. மக்கள் விழித்திரு தனித்திரு விழகி இருனு சொல்லிட்டு டாஸ்மாக் கடைகளை திறந்து வரிசையில் நிறுத்தி குடிக்கச் சொல்லுவது எப்படி நியாயமாகும். வருமானம் இன்றி வீட்டிற்குள் முடங்கி இருக்கும் எங்கள் குடும்பத்தில் சாப்பாட்டிற்கு இருக்கும் கொஞ்சம் பணத்தையும் மதுபானக்கடைகளை திறந்து விட்டு பட்டினி போட நினைக்கு அரசாங்கத்திற்கு எதிராக நாங்க போராடாமல் வீட்டிற்குள் இருந்தால் குடும்பம் தெருவுக்கு வந்துவிடும். உயிர்க்கொல்லி நாட்டை அழித்துக்கொண்டிருக்கும் போது ஒரு அரசாங்கம் மதுக்கடைகளை திறந்து விடுகிறது என்றால் இது அரசாங்கமாக இல்லை வேறு எதுவுமா என்று எங்களுக்கு தெரியவில்லை. இன்னும் ஊரடங்கு முடியவில்லை. அதற்குள் மதுக்கடைகளை அவசரஅவசரமாக திறந்து விடக் காரணம் என்ன? ஏன் இப்படி அரசு நடந்து கொள்கிறது? என்பது மர்மமாக இருக்கிறது. எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. இரண்டு முறையும் நீதிமன்றம் டாஸ்மாக் வழக்கை எடுக்காமல் தள்ளிவைத்தது எங்கள் தமிழக மக்களின் தாலியை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்று பெரு மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறோம்.எனவே எங்கள் மறைமாவட்ட ஆயர்கள் இருவர் மீதும் எங்களுக்கு ஆதாரவாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எம்பி எம்எல்ஏக்கள் பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருக்கும் போது சமூக இடைவெளி இல்லாமலும் கூட்டம் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காகவும்  வழக்கு பதிவு செய்திருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

 .

click me!