கொரோனா நோயாளிகளுக்கு பி.எம். கேர்ஸ் நிதியை ஏன் செலவு பண்ணல..? கேள்விகளால் துளைத்தெடுக்கும் காங்கிரஸ் கட்சி!

By Asianet TamilFirst Published May 12, 2020, 9:41 PM IST
Highlights

“பிரதமர் நிவாரண நிதி என ஒன்று இருக்கும்போது ‘பி.எம். கேர்ஸ்’ நிதியென தனியாக ஏன் உருவாக்கப்பட்டது? கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் இது உருவாக்கப்பட்டது. ஆனால், பிஎம் கேர்ஸ் நிதியை கொரோனா நோயாளிகளுக்குக்கூட இதுவரை ஏன் செலவிடவில்லை? பிஎம் கேர்ஸ் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை மத்திய தலைமை தணிக்கை அலுவலகம் தணிக்கை செய்ய வேண்டும்."

பிஎம் கேர்ஸ் நிதியை கொரோனா நோயாளிகளுக்குக்கூட இதுவரை ஏன் செலவிடவில்லை என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா பாதிப்பு நிவாரண நிதி திரட்டுவதற்காக மத்திய அரசால் ‘பி.எம். கேர்ஸ்’ அறிவிக்கப்பட்டது. ‘பிரதமர் நிவாரண நிதி’ என்ற பெயரில் ஒரு நிதி திரட்டும் அமைப்பு உள்ளது. அதற்கு மாறாக ‘பி.எம். கேர்ஸ்’ அறிவிக்கப்பட்டது எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பி.எம். கேர்ஸ் நிதி தொடர்பாக காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்டு தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது. “பி.எம். கேர்ஸ் நிதியில் முரண்பாடுகள் உள்ளன. அதில் வெளிப்படைத்தன்மை இல்லை.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் மனு சிங்வி இன்று காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சிங்வி கூறுகையில், “பிரதமர் நிவாரண நிதி என ஒன்று இருக்கும்போது ‘பி.எம். கேர்ஸ்’ நிதியென தனியாக ஏன் உருவாக்கப்பட்டது? கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் இது உருவாக்கப்பட்டது. ஆனால், பிஎம் கேர்ஸ் நிதியை கொரோனா நோயாளிகளுக்குக்கூட இதுவரை ஏன் செலவிடவில்லை? பிஎம் கேர்ஸ் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை மத்திய தலைமை தணிக்கை அலுவலகம் தணிக்கை செய்ய வேண்டும். அல்லது சுயாட்சி பெற்ற நம்பகத்தன்மை உள்ள நிறுவனம் தணிக்கை செய்ய அனுமதிக்கலாம்” என்று சிங்வி தெரிவித்துள்ளார்.

click me!