திமுக -பாஜக தள்ளுமுள்ளு!!அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து இழுக்க எதிர்ப்பு..பாஜக எம்.எல்.ஏ கைது

By Thanalakshmi VFirst Published Jun 12, 2022, 11:15 AM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வேளிமலை முருகன் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டத்தில் பங்கேற்று வடம் பிடித்து இழுக்க அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, இந்து அமைப்பினர் கோஷங்கள் எழுப்பிய எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உட்பட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குமாரகோயிலில் உள்ள வேளிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஒரு தேரில் முருகன்- வள்ளி அம்பாளும், விநாயகர் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். தொடர்ந்து அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர்.

அப்போது திடீரென்று பாஜக மற்றும் இந்து அமைப்பினர், மனோ தங்கராஜ், மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று கூறி தேரை வடம் பிடித்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜக எம்.எல்.ஏ எம். ஆர்.காந்தி , பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மிசா சோமன் உள்ளிட்டோர்  கலந்துக்கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

ஆனால் அதேநேரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு ஆதரவாக திமுகவினர் தேரை இழுத்தவாறு ‘வெற்றிவேல் முருகனுக்கு... அரோகரா...’ என போட்டி போட்டு கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூட்டத்தை கலைத்தனர். மேலும் பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, அர்ஜூன் சம்பத் உட்பட 63 பேரை கைது செய்தனர்.

முன்னதாக பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் தேரோட்ட நிகழ்ச்சியையும் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் தொடக்கி வைத்தனர். அப்போதும் பாஜக, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் குறிப்பிடத்தக்கது. பாஜக, இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 இடங்களில் சாலைமறியல் ஈடுபட்ட, 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க: சங்கராச்சாரியர் கம்பி எண்ணியது தெரியுமா.? மோடி பூச்சாண்டியா காட்றீங்க.? மதுரை ஆதினத்துக்கு திமுக பதிலடி!

click me!