Temple Chariot Tragedy : அப்ப 2 பேர்.. இப்ப 11 பேர்.. இதற்கெல்லாம் அரசு தான் காரணம்.. ஒரே அடியாக அடித்த ஈபிஎஸ்

Published : Apr 27, 2022, 01:03 PM ISTUpdated : Apr 27, 2022, 01:06 PM IST
Temple Chariot Tragedy : அப்ப 2 பேர்.. இப்ப 11 பேர்.. இதற்கெல்லாம் அரசு தான் காரணம்.. ஒரே அடியாக அடித்த ஈபிஎஸ்

சுருக்கம்

Temple Chariot Tragedy : தஞ்சையில்‌ கோவில் தேரோட்டத்தின்‌ போது 11 நபர்கள்‌ உயிரிழந்த துயரச்சம்பவம், அரசின்‌ கவனக்‌ குறைவினால் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தஞ்சையில்‌ கோவில் தேரோட்டத்தின்‌ போது 11 நபர்கள்‌ உயிரிழந்த துயரச்சம்பவம், அரசின்‌ கவனக்‌ குறைவினால் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்‌ மாவட்டம்‌, மேலவெளி ஊராட்சி, களிமேடு கிராமத்தில்‌ அப்பர்‌ குரு பூஜை 94ம்‌ ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்று வந்தது. திருவிழாவின்‌ ஒரு நிகழ்வாக இன்று விடியற்காலை தேர்திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் தஞ்சை பூதலூர்‌ சாலையில்‌ தேர்‌ திரும்பும்‌ போது, மேலே சென்ற உயர்‌ அழுத்த மின்சார கம்பியின்‌ மீது தேர்‌ உரசியதில்‌ தேரின்‌ மீது மின்சாரம்‌ தாக்கி 3 சிறுவர்கள்‌ உட்பட 11 பேர்‌ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்‌.

இதுக்குறித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்‌ திருவிழா என்றாலே, தேரோடும்‌ வீதிகளில்‌ உள்ள பகுதிகளில்‌ மின்சாரம்‌ துண்டிக்கப்பட்டும்‌, சாலைகள்‌ செப்பணிடப்பட்டும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌. ஆனால் இந்நிகழ்வில்‌ இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.  மாவட்ட நிர்வாகம்‌ சரியாக திட்டமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததால்‌, இத்துயரச்‌ சம்பவம்‌ ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கூறினார். 

உயிரிழந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு அரசு தலா 5 லட்சம்‌ ரூபாய்‌ அறிவித்துள்ளது. இது போதாது. அதை உயர்த்தி உயிரிழந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம்‌ வழங்க வேண்டும்‌ என்றும்‌, காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம்‌ வழங்க வேண்டும்‌ என்றும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

மதுரை சித்திரை திருவிழாவில், இந்த ஆண்டு சுவாமியை சுமந்து வருகிற சீர்பாதத்தினருக்கும்‌, நிர்வாகத்திற்கும்‌ முழுமையான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தினால்‌, சுவாமி 5.30 மணிக்கு மேல்தான்‌ தல்லாகுளத்திலிருந்து தாமதமாக புறப்பட்டு, வழியில்‌ உள்ள சுமார்‌ 14 மண்டகப்படிகளுக்கு கள்ளழகர்‌ எழுந்தருளாமல்‌, நேரடியாக வைகை ஆற்றிற்கு அழைத்துச்‌ செல்லப்பட்டார்‌. இதனால்‌ 14 மண்டகப்படிகளில்‌ காத்திருந்த பக்தர்களும்‌, வழியெங்கும்‌ காத்திருந்த பக்தர்களும்‌ ஒன்றாக குழுமி, சுவாமி தரிசனம்‌ செய்ய முயற்சித்த போது இரு பக்தர்கள் இறந்த துயரச்‌ சம்பவமும்‌, 21 பேர்‌ படுகாயமடைந்த சம்பவமும்‌ ஏற்பட்டது. மேலும்‌ பாதுகாப்பு பணியில்‌ ஈடுபட்டிருந்த சிறப்பு காவல்‌ ஆய்வாளர்‌  உயிரிழந்த சம்பவமும்‌ நடைபெற்றது.

சித்திரைத்‌ திருவிழாவின்‌ போது மதுரை மற்றும்‌ அருகிலுள்ள மாவட்டங்கள்‌, பிற மாநிலங்கள்‌ மற்றும்‌ வெளிநாடுகளிலிருந்தும்‌ பக்தர்கள்‌ பெருமளவில்‌ கலந்து கொள்வார்கள்‌. எவ்வளவு நபர்கள்‌ கலந்து கொள்வார்கள்‌ என்பதனை உளவுத்துறை
முன்னதாகவே கனித்து அதற்கேற்ப காவல்துறை, மாவட்ட நிர்வாகம்‌, இந்துசமய அறிநிலையத்துறை ஆகியவை ஒன்றிணைந்து, திட்டமிட வேண்டும்‌. ஆனால்‌ இத்திருவிழாவின்‌ போது அதிகாரிகளின்‌ ஒருங்கிணைப்பின்மையால்‌, எவ்வளவு பக்தர்கள்‌ வருவார்கள்‌ என்பதை கணிக்காததாலும்‌, கள்ளழகர்‌ வைகை ஆற்றினை அடையும்‌ வரை வழியில்‌ உள்ள மண்டகப்படி மரியாதையினை
ஏற்றுக்கொள்ளும்‌ முறையினை சரியானபடி திட்டமிடாமலும்‌, தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளாததாலும்‌, இந்த துயரச்‌ சம்பவம்‌ நடந்துள்ளது.

இச்சம்பவம்‌ நடைபெற்றவுடன்‌, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்‌ இது போன்ற துயரச்‌ சம்பவம்‌ இனி நடைபெறாது என்று பேட்டியளித்தார்‌. ஆனால்‌ இன்று, தஞ்சையில்‌ தேரோட்டத்தின்‌ போது 11 நபர்கள்‌ உயிரிழந்த துயரச்சம்பவம்‌ நடைபெற்றுள்ளது. அரசின்‌ கவனக்‌ குறைவினால்‌ இத்துயரச்‌ சம்பவம்‌ ஏற்பட்டுள்ளது இத்துயரச்‌ சம்பவங்களுக்கு அரசே முழு பொறுபேற்க வேண்டும்‌. எனவே இதுபோன்ற திருவிழாக்கள்‌ நடைபெறும்‌ நிகழ்வுகளில்‌ சம்பந்தப்பட்ட திருக்கோயில்‌ அலுவலர்கள்‌ எடுக்க வேண்டிய முன்னெச்சரிப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்ய வேண்டும்‌மேலும்‌ தவறிழைத்த அதிகாரிகள்‌ மீது உரிய நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்‌ என்று பேசினார். 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி