எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அதிரடி கைது

Published : Oct 19, 2022, 09:31 AM ISTUpdated : Oct 19, 2022, 01:36 PM IST
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அதிரடி கைது

சுருக்கம்

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் இன்று நடைபெறும் என தலைமை அறிவித்திருந்தது. ஆனால், இதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இபிஎஸ் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்ததிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி எடப்பாடி பழனிசாமி அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து, அவை காவலர்கள் மூலம் அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற உதத்தரவிட்டு ஒருநாள் அவையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் இன்று நடைபெறும் என தலைமை அறிவித்திருந்தது. ஆனால், இதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். 

இதையும் படிங்க;- தூத்துக்குடி துப்பாக்கி சூடு..! எடப்பாடிக்கு தொடர்பு இல்லையா..? தமிழக அரசு விசாரிக்க வேண்டும்- திருமாவளவன்

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கறுப்பு சட்டை அணிந்து உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அறிவுறுத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்ததால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  முதல்வர் ஆலோசனையின் பேரிலேயே செயல்படும் சபாநாயகர்.. திமுகவின் பி டீம் ஓபிஎஸ்.. இறங்கி அடிக்கும் இபிஎஸ்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!