நான் சும்மா இல்ல.. ஜல்லிக்கட்டில் பல காளைகளை அடக்கி இருக்கேன்.. சட்டமன்றத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்.

Published : Apr 28, 2022, 02:46 PM ISTUpdated : Apr 28, 2022, 02:49 PM IST
நான் சும்மா இல்ல.. ஜல்லிக்கட்டில் பல காளைகளை அடக்கி இருக்கேன்.. சட்டமன்றத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்.

சுருக்கம்

இளம் வயது காளையாக தான் இருந்தபோது பல காளைகளை ஜல்லிகட்டில் அடக்கியிருப்பதாக எதிர்கட்சி துணை தலைவர்  ஓ பன்னீர்செல்வம் ஜல்லிகட்டு தொடர்பான விவாதத்தின் போது கூறினார்.  

சட்டபேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, ஜல்லிகட்டு யாருடைய ஆட்சி காலத்தில் தடை செய்யபட்டது; யாருடைய ஆட்சியில் ஜல்லிகட்டு பெறபட்டது என்ற வாதம் நடைபெற்றது .அப்போது பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் எதிர் கட்சி துணைத்தலைவர் ஓ பன்னீர்செல்வத்தை அதிமுக உறுப்பினர்கள் எல்லாம் ஜல்லிகட்டு நாயகர்என்று அழைக்கின்றனர். அவர் எத்தனை ஜல்லிகட்டில் கலந்துகொண்டு காளைகளை அடைக்கினார் என கேள்வி எழுப்பினார்.

இதற்க்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம் இளம் வயது காளையாக இருந்தபோது பெரியகுளத்தில் பல காளைகளை அடக்கியதாக கூறினார். மேலும் திமுக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காளையை விலங்குகள் பட்டியலில் சேர்ததால்தான் ஜல்லிகட்டு நடத்த மூடியாமல் போனதால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதன் பிறகு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று அதிமுக ஆட்சியில் ஜல்லிகட்டிற்க்கு அனுமதி வாங்கியதாக விளக்கமளித்தார். அதனால் தான் தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜல்லிகட்டு நடைபெறவதாக அவர் கூறினார்.

அப்போது குறிகிட்ட காங்கிரஸ் கட்சிகுழு தலைவர் செல்வ பெருந்தகை காங்கிரஸ்- திமுக ஆட்சியில் ஜல்லிகட்டை தடை செய்யவில்லை. பீட்டா மற்றும் பூளுகிராஸ் அமைபுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடைபெற்றதாகவும், மேலும் அதிமுக ஜல்லிகட்டை பெற்று கொடுக்கவில்லை மக்கள் போராட்டதால் ஜல்லிகட்டு கிடைத்ததாக கூறினார். எனவே ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!