தமிழக ஆளுநராக ரவிசங்கர் பிரசாத் நியமனம் செய்ய வாய்ப்பு? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Jul 10, 2021, 6:46 PM IST
Highlights

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை இன்று சந்தித்துள்ள நிலையில் அவர் மாற்றப்பட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை இன்று சந்தித்துள்ள நிலையில் அவர் மாற்றப்பட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய அரசின் அழைப்பின் பேரில் டெல்லி சென்றுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசினார். மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இன்று சந்தித்தார். 

இதனிடையே, பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்படலாம் என்றும் அதற்காகவே அவர் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்குப் பதில் மத்திய அமைச்சராக இருந்து அண்மையில் பதவி விலகிய ரவிசங்கர் பிரசாத் அல்லது பிரகாஷ் ஜவடேகர் இருவரில் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநரை மத்திய அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது. 

click me!