ஒரு வாக்கு பெற்றவருக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு.. அண்ணாமலை அதிரடி சரவெடி..!

By vinoth kumarFirst Published Oct 12, 2021, 9:50 PM IST
Highlights

பாஜக வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் போட்டியிட்டு ஒரு ஓட்டு மட்டுமே பெற்றார். கார்த்திக் உள்பட அவரது குடும்பத்தில் தாய், தந்தை, மனைவி, 2 சகோதரர்கள் என 5 பேர் இருந்தும் காத்திக்கிற்கு ஒரு ஓட்டுதான் கிடைத்துள்ளது. ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜகவை சேர்ந்தவர் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாக மதியம் முதலே பகிரப்பட்டு வந்தது. 

ஒரு வாக்கு பெற்ற நபருக்கு எதிர்காலத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது குருடம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு உறுப்பினர் பதவி சமீபத்தில் காலியானது. இந்த வார்டில் மொத்தம் 1,551 வாக்காளர்கள் உள்ளனர். காலியாக உள்ள 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 1551 வாக்குகளில் 913 வாக்குகள் பதிவாகின. இதில், திமுக நிர்வாகி அருள்ராஜ் 387 வாக்குகளுத், சுயேட்சையாக போட்டியிட்ட ஜெயராஜ் என்பவர் 240 வாக்குகளும், அதிமுக நிர்வாகி வைத்தியலிங்கம் 196 வாக்குகளும் பெற்றனர். 

மேலும், பாஜக வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் போட்டியிட்டு ஒரு ஓட்டு மட்டுமே பெற்றார். கார்த்திக் உள்பட அவரது குடும்பத்தில் தாய், தந்தை, மனைவி, 2 சகோதரர்கள் என 5 பேர் இருந்தும் காத்திக்கிற்கு ஒரு ஓட்டுதான் கிடைத்துள்ளது. ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜகவை சேர்ந்தவர் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாக மதியம் முதலே பகிரப்பட்டு வந்தது. நீண்ட நேரம் டுவிட்டர் ட்ரெண்டிங்கிலும் இருந்தது.

இந்நிலையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநரை நேரில் சந்தித்தார். தமிழகத்தில் நடக்கும் வன்முறை மற்றும் ஆணவக் கொலைகளை கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக எம்.பி.க்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆளுநரிடம் அவர் மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர்;- ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்குப்பெற்ற நபருக்கு எதிர்காலத்தில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்' என்று தெரிவித்தார்.

click me!