திங்கள் முதல் மீண்டும் ஊரடங்கா..? இவரே சொல்லிவிட்டால் அது நடக்காமல் இருக்குமா..?

By Thiraviaraj RMFirst Published Jun 4, 2021, 6:50 PM IST
Highlights

திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்படலாம் என்றும் அதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்படலாம் என்றும் அதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார்.


 
ஊரடங்கில் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து, வணிகர் சங்கங்களின் தலைவர் விக்கிரமராஜா ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சில தளர்வுகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து தலைமை செயலாளரை சந்தித்தோம் என்றார்.

அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும் என நினைத்தாலும் கொரோனா காரணமாக, தொற்று அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளுடனும் தொற்று குறைவான இடங்களில் சில தளர்வுகளுடனும் கடைகளை திறக்க நேற்று கோரிக்கை வைத்ததாகவும் அதுகுறித்து இன்று ஆலோசனை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

வரும் 7 ஆம் தேதி காலை முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்படலாம் எனவும் அது குறித்த விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் விக்கிரமராஜா கூறினார். இந்த விக்ரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா விருகம்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 

click me!