என்னை பொறுத்தவரையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தான் நல்லது... கார்த்தி சிதம்பரம் ஓபன் டாக்..!

By vinoth kumarFirst Published Jun 4, 2021, 6:37 PM IST
Highlights

மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் பாகுபாடு உள்ளது. மேலை நாடுகளில் 65% முதல்  70% பேர் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ள நிலையில் இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலே தடுப்பூசி போட்டு உள்ளார்கள். தடுப்பூசி விவகாரத்தில் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே மத்திய பாஜக அரசு வஞ்சித்துவிட்டது.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு ஒரு வழியாக இருந்தாலும், தடுப்பூசியே நிரந்தர தீர்வு என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மத்திய அரசு தான் காரணம். சரியான திட்டமிடல் இல்லாதது மற்றும் கொள்முதல் இல்லாதது, உற்பத்தியை அதிகரிக்காமல்  தவறான கொள்கைகளால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.மாநிலங்களுக்கு முறையாக தடுப்பூசிகள் வழங்கப்படாத காரணத்தினால் இன்று இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை இந்தியா அளவில் 5 சதவீதமாக தான் உள்ளது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் பாகுபாடு உள்ளது. மேலை நாடுகளில் 65% முதல்  70% பேர் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ள நிலையில் இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலே தடுப்பூசி போட்டு உள்ளார்கள். தடுப்பூசி விவகாரத்தில் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே மத்திய பாஜக அரசு வஞ்சித்துவிட்டது.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு ஒரு வழியாக இருந்தாலும், தடுப்பூசியே நிரந்தர தீர்வு. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். இந்த விலை உயர்வு சாமானியர்களை தான் பாதிக்கிறது. நீட் தேர்வு நகர்ப்புற மாணவர்களுக்கு எளிதாகவும், கிராமப்புற மாணவர்களுக்கு சிரமமாகவும் உள்ளது. இதனால் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. அது தொடர வேண்டும்.

மத்திய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளது. சில மாநில அரசுகளும் தேர்வு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். தமிழகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் முடிவு தெரிய வரும். 12ம் வகுப்பு தேர்வு நடத்தி  மதிப்பெண்கள் பெற்றால் தான் கல்லூரிகளில் மேல்கல்வி தொடர முடியும்.  என்னைப் பொறுத்தவரை தேர்வை நடத்தி தேர்வு மதிப்பெண்கள் மூலம் கல்லூரி செல்வது நல்லது. மாறாக நடத்தினால் ஏற்ற தாழ்வு ஏற்படும். இதனால் சிலர் நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது. மேலும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையிலும் குளறுபடி ஏற்படும் என்று கூறினார்.

click me!