லெஃப்டில் கைநீட்டி, ரைட்டில் ரூட் போடும் மஹேந்திரன்... டாக்டர் எடுத்த தடாலடி முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Jun 4, 2021, 4:16 PM IST
Highlights

தன் தொழில் விருத்திக்கு அதுதான் சரிப்பட்டு வரும் என நினைத்து சம்மதித்து உள்ளதாக கூறுகிறார்கள்

கோவையில் மிகுந்த செல்வாக்கு மிக்க மகேந்திரனை கொத்தி செல்ல பாஜக, திமுக என போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இந்த நிலையில் திமுகவில் மகேந்திரனுக்கு பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் மகேந்திரன் கருணாநிதி பிறந்தநாள் குறித்து ஒரு ட்வீட்டை போட்டதும் லெஃப்டில் கைகாட்டி ரைட்டில் செல்கிறாரோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்த பிரமுகருக்கு, தாமரை கட்சி வலை வீசிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த கட்சியில், கமலை தவிர எல்லோரும் கழண்டு கொண்டார்கள். கமலுக்கு வலது கரமாக இருந்த கொங்கு மண்டலத்து புள்ளியான டாக்டர் மகேந்திரன், கமல்ஹாசனை கோவையில் நிறுத்தி, அங்கே பாஜக., வெற்றிக்கு மறைமுகமாக உதவிட்டார் என அவர் மேல் கமல் தரப்பில் புகார் சொன்னார்கள்.

இதனால், வெறுத்து போனவர் கட்சியில் இருந்து வெளியேறி விட்டார். அவர், அ.தி.மு.க., அல்லது தி.மு.க.,வுக்கு போவார் என தகவல் உலா வந்தது. ஆனால், ரேஸ் குதிரை வளர்ப்பு, விவசாயம், மருத்துவம் என பல துறைகளில் தொழிலதிபராக இருப்பதால், அவரை தங்களது கட்சியில சேர்க்க, பா.ஜ.,வினர் முயற்சி செய்து வருகிறார்கள். அவரும், தன் தொழில் விருத்திக்கு அதுதான் சரிப்பட்டு வரும் என நினைத்து சம்மதித்து உள்ளதாக கூறுகிறார்கள்.

click me!