பள்ளிகளை திறப்பது மோசமான முடிவு... பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jun 2, 2020, 10:27 AM IST
Highlights

கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும்வரையோ, அல்லது, தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரையோ பள்ளிகளை திறக்கக்கூடாது என பெற்றோர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும்வரையோ, அல்லது, தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரையோ பள்ளிகளை திறக்கக்கூடாது என பெற்றோர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் ஜூலை மாதம் ஆலோசனை நடத்திய பிறகு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 2 லட்சத்து 13 ஆயிரம் பெற்றோர் கையெழுத்திட்ட மனு ஒன்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ’’ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பது என்பது அரசின் மிகமோசமான முடிவாகும். நெருப்பை அணைக்க வேண்டி இருக்கும்போது, நெருப்புடன் விளையாடுவதற்கு சமமானது. நடப்பு முதலாவது பருவம், ஆன்லைன் வழியிலேயே நீடிக்க வேண்டும். கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும்வரையோ, அல்லது, தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரையோ பள்ளிகளை திறக்கக்கூடாது’’ என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

click me!